இந்த உலகில் ஃபேஷன் விரும்பிகளுக்கு குறையே இல்லை, அதிலும் சிலர் வாழ்க்கையையே பேஷன் நோக்கி நகர்த்த வேண்டும் என்று நினைப்பார்கள்.
அதற்காக சுற்றியுள்ள அனைத்தையும் அவ்வாறு மாற்ற முன்வருவார்கள். இவர்களின் மன நிலையை புரிந்துகொள்ளும் பல ஃபேஷன் நிறுவனங்கள் அவர்களுக்காகவே பிரத்யேகமாக பல பொருட்களை தயாரித்து வருகிறது.
ஃபேஷனுக்காக உருளைக்கிழங்கு சிப்ஸ் கவரை பேக்காக அணிவது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஃபேஷன் பிராண்டான Balenciaga எனும் முன்னணி நிறுவனம் சிப்ஸ் கவரை பேக்காக அறிமுகப்படுத்தியுள்ளது.
அமெரிக்க உருளைக்கிழங்கு சிப்ஸ் பிராண்டான Lays உடன் இணைந்து புதிதாக இந்த வகையான பைக்களை தயாரிக்கும் முயற்சிகளில் Balenciaga நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
சுவைகளின் அடிப்படையில் வெவ்வேறு பாக்கெட்டுகளில் வரும் சிப்களைப் போலவே, நீலம், மஞ்சள் மற்றும் சிவப்பு என மூன்று வண்ணங்களில் பைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
demnagram என்ற பயனர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த புதிய வகை பைக்களின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதனை கண்ட இணையவாசிகள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
ஃபேஷனுக்காக Balenciaga வித்தியாசமான, விலை உயர்ந்த பொருட்களை தயாரிப்பது இது முதல்முறை அல்ல. இதற்கு முன்பு Trash Pouch எனப்படும் குப்பை பை , ஷூலேஸ் காதணிகள் போன்றவைற்றை இந்த நிறுவனம் உருவாக்கியதும் குறிப்பிடத்தக்கது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust