பாலி டி பாங்காக் - இங்கெல்லாம் சம்மர் கிடையாதா?  canva
உலகம்

பாலி டி பாங்காக் - இங்கெல்லாம் சம்மர் கிடையாதா?

ஒரு சில இடங்களில் சம்மர் சீசனாகவே இருந்தாலும், அது சம்மர் போல தெரிவதில்லை. அந்த இடங்களை இங்கே பட்டியலிட்டிருக்கிறோம்.

Keerthanaa R

இயற்கையாகவே வெயில், மழை, குளிர் என நாம் வசிக்கும் இடத்தின் வெப்பநிலை மாறுபடுகிறது. குறிப்பிட்ட மாதத்தில் இந்த வெப்பநிலை இருக்கும் என நாம் அறிவோம்.

அதற்கேற்றார்போல நம் அன்றாடத்தில் சில மாற்றங்களை நாம் செய்வோம். சம்மர் வந்தால் குளிர் பிரதேசங்களுக்கு செல்வதும், குளிர்காலத்தில் சூடாக இருக்கும் இடங்களுக்கு கிளம்புவதாக சிலர் இருப்பார்கள்.

ஆனால் ஒரு சில இடங்களில் சம்மர் சீசனாகவே இருந்தாலும், அது சம்மர் போல தெரிவதில்லை. அந்த இடங்களை இங்கே பட்டியலிட்டிருக்கிறோம்.

பாலி, இந்தோனேசியா

இந்தோனேசியா என்றதும் நம் நினைவுக்கு வருவது பாலி தான்.

பாலியில் சம்மர் சீசனிலும் அதிக வெயில் இருப்பதில்லை. சராசரியாக குளிர்காலத்தில் 26 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் வெப்பநிலை, வெயில் காலத்தில் 27ஐ தான் தொடுகிறது.

ஏப்ரல் முதல் அக்டோபர் மாதம் வரை பாலி சென்று வர சிறந்த இடமாகும்.

கேப் வெர்டி

ஆப்பிரிக்காவில், மத்திய அட்லாண்டிக் கடற்கரையில் அமைந்திருக்கும் இந்த தீவுக்கூடத்தில் சராசரி வருடாந்திர வெப்பநிலை, கடற்கரை பகுதிகளில் 25 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கிறது.

20ºC மற்றும் 21ºC வெப்பநிலை ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலும், ஆகஸ்ட் மாதத்தில் அதிகபட்ச மதிப்புகள் 26ºC முதல் 28ºC வரையிலும் இருக்கும்.

பாங்காக்

தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்கிற்கு வருடத்தின் எந்த மாதத்திலும் செல்லலாம். குறிப்பாக டிசம்பர் சமயத்தில் வெப்பநிலை 25 முதல் 30ஐ தொடுகிறது. இந்த சமயத்தில் சென்று வந்தால் உங்களுக்கு நல்ல அனுபவம் கிடைக்கும்.

லாவோஸ்

இந்த பட்டியலில் இடம்பிடித்திருக்கும் அடுத்த இடம், லாவோஸ். ஆண்டுதோறும் இந்த ஊரின் வெப்பநிலை, 32 டிகிரியாக இருக்கிறது. இதனால் குளிர்காலத்தில் இதமாகவும் இருக்கிறது,

அதே போல சம்மர் வந்தாலும் பெரிதாக வெயில் சுட்டெரிப்பதில்லை.

மெக்சிகோ

மெக்சிகோவில் வெப்பநிலை சம்மரில், கூட 10 முதல் 30 டிகிரி செல்சியஸில் இருக்கிறது. இதனால் சம்மரில் சென்று வர மெக்சிகோ ஒரு நல்ல சாய்ஸ் ஆக இருக்கும்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?