bizarre toilet facts from around the world  Twitter
உலகம்

உலகெங்கிலும் உள்ள கழிப்பறைகள் பற்றிய விசித்திரமான தகவல்கள் - என்னென்ன?

சராசரியாக ஒரு நபர் தனது வாழ்நாளில் மூன்று வருடங்களை கழிப்பறையில் செலவிடுகிறார் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சராசரியாக ஒருவர் வருடத்திற்கு 2,500 முறை கழிவறைக்குச் செல்வார். இது போன்ற தகவல்களை இங்கே தெரிந்துகொள்வோம்.

Priyadharshini R

உலகெங்கிலும் இருக்கும் கழிப்பறை குறித்து பலரும் அறியாத தகவல்களை தான் நாம் பார்க்க போகிறோம்.

கழிப்பறை குறித்து என்ன தகவல் இருக்க போகிறது என்று தானே யோசிக்கிறீர்கள், இருக்கிறது!

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, 2.3 பில்லியன் மக்களுக்கு இன்னும் கழிப்பறைகள் இல்லை.

சராசரியாக ஒரு நபர் தனது வாழ்நாளில் மூன்று வருடங்களை கழிப்பறையில் செலவிடுகிறார் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சராசரியாக ஒருவர் வருடத்திற்கு 2,500 முறை கழிவறைக்குச் செல்வார்.

இது போன்ற தகவல்களை இங்கே தெரிந்துகொள்வோம்.

கியூபா

கியூபாவில் சில அடிப்படை பொருட்களுக்கு தட்டுப்பாடு உள்ளது. டாய்லெட் பேப்பர் அவற்றில் ஒன்று. தேவை அதிகமாக இருப்பதால், சிலர் அதை நாட்டுக்குள் கடத்தி விற்பனை செய்து வருகின்றனர்.

பிரான்ஸ்

பாரிஸின் தெருக்களில் மக்கள் சிறுநீர் கழிப்பது ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது.

பொது இடங்களில் சிறுநீர் கழிக்கக்கூடாது, மீறினால் 68 யூரோ கட்டணம் செலுத்த ( இந்திய மதிப்பில் 6,000) வேண்டும் என்று விதித்தப்பட்ட போதிலும் அந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கவில்லை.

ஜெர்மனி

கழிவறைகள் அழுக்காகாமல் இருக்க, ஜெர்மனியில் ஆண்கள் நின்று கொண்டு சிறுநீர் கழிக்காமல் உட்கார்ந்து சிறுநீர் கழிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

ஸ்வீடன்

ஸ்வீடனில் பல பொது கழிப்பறைகளைப் பயன்படுத்த நீங்கள் பணம் செலுத்த வேண்டும்.

மெக்சிகோ

மெக்ஸிகோ நகரத்தில் அதிக அளவு காற்று மாசுபாடும் இருக்கும். ஆனால் காற்றுத் துகள்களிலும் மலம் உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? மெக்சிகோவில் சுகாதாரப் பிரச்சினைகள் உள்ளன. இதில் தண்ணீரின் தரமும் அடங்கும்.

தென் கொரியா

உலகின் முதல் கழிப்பறை தீம் பார்க் தென் கொரியாவில் உள்ளது.

இந்தியா

கடந்த 5,000 ஆண்டுகளில் உலகெங்கிலும் உள்ள சுகாதாரம் மற்றும் கழிவறைகளின் பரிணாம வளர்ச்சியின் வரலாற்றில் உங்கள் பங்கு இருந்தால், டெல்லியில் உள்ள சுலப் சர்வதேச கழிப்பறை அருங்காட்சியகம் செல்ல வேண்டிய இடம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?