இந்திய போரா முஸ்லிம்கள் : எகிப்தில் மசூதிக்கு சென்ற மோடி pmindia
உலகம்

இந்திய போரா முஸ்லிம்கள் : எகிப்தில் மசூதிக்கு சென்ற மோடி – யார் இந்த போரா முஸ்லிம்கள்?

அ.தா.பாலசுப்ரமணியன்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தமது சமீபத்திய எகிப்து பயணத்தின்போது அந்நாட்டின் வரலாற்றுச் சிறப்பு மிக்க அல் ஹக்கீம் மசூதிக்குச் சென்றிருந்தார்.

இது இந்தியாவில் உள்ள  தாவூதி போரா முஸ்லிம்கள் செலவு செய்து புனரமைத்த மசூதி என்பது இந்த செய்தியை மேலும் சுவாரசியமாக்குகிறது.

இந்த தாவூதி போரா முஸ்லிம்கள் இந்தியாவிலேயே அதிகமாக வாழும் மாநிலம் குஜராத் என்பது இன்னுமொரு வியப்பூட்டும் தகவல்.

யார் இந்த போரா முஸ்லிம்கள் ?

யார் இந்த போரா முஸ்லிம்கள்? அவர்கள் ஏன் எகிப்தில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க மசூதியை செலவு செய்து புனரமைக்க வேண்டும்?

அல் ஹக்கீம் மசூதி  என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்த மசூதியின் முழுப் பெயர் ‘இமாம் அல் ஹக்கீம் பி அமர் அல்லா’ என்பதாகும். கி.பி. 11ம் நூற்றாண்டில் ஃபாத்திமிட் வம்சம் எகிப்தை ஆட்சி செய்த காலத்தில் இந்த மசூதி கட்டப்பட்டது என்று எகிப்துக்கான இந்தியத் தூதர் அஜித் குப்தே கூறினார்.

இந்தியாவில் குடியேறிய போரா முஸ்லிம்கள் இந்த ஃபாத்திமிட் வம்சத்தில் இருந்து தோன்றியவர்கள். 1970ல் இந்த மசூதியை இவர்கள் புனரமைக்கத் தொடங்கினர். அப்போதிருந்து இந்த மசூதியை போரா முஸ்லிம்களே பராமரித்தும் வருகிறார்கள்.

16வது ஃபாத்திமிட் கலீபாவான அல் ஹக்கீம் பி அமர் அல்லா என்பவரது பெயரே இந்த மசூதிக்கு சூட்டப்பட்டது.  உலகம் முழுவதும் உள்ள போரா முஸ்லிம் சமூகத்துக்கு மிக முக்கியமான பண்பாட்டு, சமய சின்னமாக இந்த மசூதி விளங்குகிறது.

2021ம் ஆண்டு கணக்குப்படி உலகம் முழுவதும் 20 லட்சம் முதல் 50 லட்சம் போரா முஸ்லிம்கள் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் வசிக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியாவின் குஜராத் மாநிலத்திலும் பாகிஸ்தானின் கராச்சி நகரிலும் வசிக்கிறார்கள்.

ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும், மத்தியக் கிழக்கிலும், கிழக்கு ஆப்பிரிக்காவிலும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் போரா முஸ்லிம்கள் புலம் பெயர்ந்து வாழ்கிறார்கள்.

“எனவே குஜராத்தில் பல ஆண்டுகளாக இருக்கும் போரா சமூகத்தோடு பிரதமர் மிக நெருக்கமான உறவைப் பேணி வருகிறார். இந்நிலையில், போரா சமூகத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் உள்ள சமயத் தலத்தை மீண்டும் பார்வையிடுவது அவருக்கு முக்கிய நிகழ்வாக இருக்கும்” என்று தெரிவித்தார் குப்தே.

தாவூதி போரா முஸ்லிம்களின் வரலாறு

தாவூதி போரா முஸ்லிம்கள் இஸ்லாம் மதத்தின் ஒரு பிரிவான ஃபாத்திமி இஸ்மாயிலி தாயிபி என்ற பிரிவின் போதனைகளைப் பின்பற்றுகிறவர்கள். அவர்கள் எகிப்தை பூர்வீகமாக கொண்டவர்கள் என்றும், பிறகு ஏமனுக்கு சென்ற இவர்கள், பிறகு 11ம் நூற்றாண்டில் இந்தியாவில் குடியமர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.

இதன் பிறகு 1539ம் ஆண்டு, இந்தப் பிரிவினரின் தலைமையகம் ஏமனில் இருந்து இந்தியாவின் குஜராத் மாநிலம், பதான் மாவட்டத்தில் உள்ள சித்பூர் என்ற இடத்துக்கு மாற்றப்பட்டது. இந்தியாவில் 5 லட்சம் தாவூதி போரா முஸ்லிம்கள் இருப்பதாக கூறுகிறது அரசாங்கத் தரவு. இந்தியாவில், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம் ஆகிய இடங்களிலும் இவர்கள் இருந்தாலும், குஜராத் மாநிலம் சூரத் நகரத்தையே தங்கள் சொந்த ஊராக கருதுகிறார்கள் போரா முஸ்லிம்கள்.

மிகவும் நெருங்கி வாழும் தாவூதி போரா சமூகத்தினர், இஸ்லாத்தின் ஐந்து நெறிகளான குரான் ஓதுவது, ஹஜ், உம்ரா பயணம் மேற்கொள்வது, தினசரி ஐந்து வேளை தொழுவது, ரம்ஜான் மாதத்தில்  நோன்பு இருப்பது, ஜகத் செலுத்துவது ஆகிய கடமைகளை கடைபிடிப்பவர்கள். பாரம்பரிய விழுமியங்களைக் கடைபிடிக்கும் அதே நேரம்,  வணிகம் செய்வதும், வாழ்க்கையைப் பற்றிய நவீனப் பார்வையைக் கொண்டிருப்பதும் இவர்களது அடையாளம் ஆகும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?