போரிஸ் ஜான்சன் NewsSense
உலகம்

பிரிட்டன் : பாலியல் குற்றச்சாட்டு - முக்கிய அமைச்சர்கள் ராஜினாமாவை | கவிழுமா போரிஸ் அரசு?

அப்போது தான், இதே கிறிஸ் பின்சருக்கு எதிராக, சில ஆண்டுகளுக்கு முன் பாலியல் குற்றச்சாட்டு புகார் கொடுக்கப்பட்டதாக செய்தி வெளியானது. அப்போதில் இருந்து இந்த நொடி வரை பிரிட்டன் அரசியலில் 150 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் வீசிக் கொண்டிருக்கிறது.

NewsSense Editorial Team

இந்தியாவில் ஒரு அரசியல்வாதிக்கு எதிராக ஒரு பாலியல் குற்றச்சாட்டு வழக்கு இருந்தால் என்ன ஆகும்? அது குற்றச்சாட்டு தானே இதற்கு என்ன செய்ய முடியும்? நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, தீர விசாரிக்கப்பட்டு அந்த வழக்கில் தீர்ப்பு கிடைப்பதற்குள் சம்பந்தப்பட்ட குற்றம்சாட்டப்பட்டவரே காலமாகிவிடுவார்.

ஆனால் பிரிட்டனில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மீது பாலியல் குற்றச்சாட்டு இருப்பதை கவனிக்காமல் பதவி கொடுத்ததற்காக தற்போது ஒட்டுமொத்த பிரிட்டன் அரசிலும் புயல் காற்று வீசிக் கொண்டிருக்கிறது.

யார் அந்த நாடளுமன்ற உறுப்பினர்?

கிறிஸ்டோஃபர் ஜான் பின்சர் என்பவர் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை பிரிட்டன் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சராகவும், 2020 முதல் 2022ஆம் ஆண்டு தொடக்கம் வரை வீட்டு வசதித் துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.

கடந்த 2022 பிப்ரவரியில், கிறிஸ்டோஃபர் ஜான் பின்சர் அரசின் துணை முதன்மைக் கொறடாவாக (Deputy Chief Whip) பொறுப்பில் அமர்த்தப்பட்டார்.

கடந்த ஜூன் மாத இறுதியில் (29ஆம் தேதி புதன்கிழமை) லண்டன் நகரத்தில் உள்ள கார்ல்டன் கிளப்பில் அளவுக்கு அதிகமாகக் குடித்துவிட்டு இரு ஆண்களிடம் பாலியல் ரீதியில் தவறாக நடந்து கொண்டுள்ளார்.

பிரிட்டன் நாட்டை ஆளும் கட்சியின் துணை முதன்மைக் கொறடா பதவியில் இருக்கும் ஒருவர், பொதுவெளியில் இப்படி தவறாக நடந்து கொள்ளலாமா? என ஊடகங்களில் கேள்வி எழுப்பப்பட்டு செய்தி வெளியாகத் தொடங்கியது.

அப்போது தான், இதே கிறிஸ் பின்சருக்கு எதிராக, சில ஆண்டுகளுக்கு முன் பாலியல் குற்றச்சாட்டு புகார் கொடுக்கப்பட்டதாக செய்தி வெளியானது. அப்போதில் இருந்து இந்த நொடி வரை பிரிட்டன் அரசியலில் 150 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் வீசிக் கொண்டிருக்கிறது.

நேற்று இரவு நான் அளவுக்கு அதிகமாகக் குடித்துவிட்டேன். நான் என்னையும் மற்றவர்களையும் அவமதிக்கும் விதத்தில் நடந்து கொண்டதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இப்படி ஒரு சூழலில் நான் துணை முதன்மை கொறடா பதவியில் இருந்து விலகுவது தான் சரியாக இருக்கும் என கிறிஸ் பின்சர் கடந்த ஜூன் 30 ஆம் தேதி வியாழக்கிழமை ராஜினாமா செய்துவிட்டார். இதை 'சன்' என்கிற பத்திரிகைதான் முதலில் பிரசுரித்தது.

இருப்பினும், எதிர்கட்சிகளும் ஊடகங்களும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனை விடுவதாக இல்லை.

அதெப்படி பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட, முறையாக புகார் கொடுக்கப்பட்ட ஒருவரை அரசின் உயர் பதவியில் அமர வைக்க முடியும் என தொடர்ந்து அரசின் பல தரப்பினரிடம் ஊடகங்கள் கேள்வி எழுப்பி வந்தன.

பிரதமர் போரிஸ் ஜான்சன், கிறிஸ் பின்சரை அரசு உயர் பதவியில் அமர வைப்பதற்கு முன்பே, கிறிஸ் பின்சருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகள் இருப்பது தெரியுமா என ஜூலை 1ஆம் தேதி, பிரதமர் வீடு மற்றும் அலுவக தரப்பினரிடம் ஊடகத்தினர் கேள்வி எழுப்பினர்.

அப்போது பிரதமர் அலுவலக செய்தித் தொடர்பாளர் ஒருவர், போரிஸ் ஜான்சனுக்கு தெரியாது என்று கூறினார். மேலும் அனைத்து அமைச்சரகம் சார்ந்த நியமனங்களும் கேபினெட் ஆஃபிஸ் ப்ரொப்ரைட்டி மற்றும் கோட்பாடு அணிதான் மேற்கொள்கின்றன. கிறிஸ் பின்சர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்பதால், அவரை நியமிக்க எந்த வித தடையும் அப்போது இல்லை என்றும் கூறினார்.

இதே கருத்தை பல்வேறு அரசு உயர் அதிகாரிகள் மற்றும் போரிஸ் ஜான்சனின் அமைச்சர்களும் வழிமொழிந்தனர். பணி மற்றும் ஓய்வூதியச் செயலர் தெரெசி காஃபி (Therese Coffey), குழந்தைகள் மற்றும் குடும்ப நலத் துறைச் செயலர் வில் குவின்ஸ் (Will Quince), கல்வித் துறைச் செயலர் நதீம் சஹாவி என பலரும் இதில் அடக்கம்.

ஜூலை 4ஆம் தேதி மதியம் சுமார் 12:30 மணிக்கு, போரிஸ் ஜான்சனின் அலுவலகம் முன்பு கூறியதற்கு நேர்மாறாக 'பிரதமருக்கு கிறிஸ் பின்சரின் பாலியல் குற்றச்சாட்டு குறித்து தெரியும் என்றும், அப்பிரச்சனை முறையாக புகார் கொடுக்கப்படவில்லை அல்லது அப்பிரச்சனை தீர்க்கப்பட்டுவிட்டது' என தலைகீழாக மாற்றிக் கூறியது.

ஜூலை 5ஆம் தேதி புதன்கிழமை, லார்ட் மெக்டொனால்ட் என்கிற பிரிட்டனின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் உயர் பதவியில் இருந்த அதிகாரி ஒருவர், பிரிட்டன் நாடாளுமன்ற தரக்கட்டுப்பாட்டு ஆணையருக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில் பிரதமர் ஆலுவலகம் சொல்வதில் முழு உண்மை இல்லை என குறிப்பிட்டிருந்தார்.

பிறகு பிபிசி ஊடகத்துக்கு கொடுத்த பேட்டியில், பிரிட்டனின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள், கிறிஸ் பின்சரின் மோசமான பாலியல் நடவடிக்கைகளைக் குறித்து கேபினெட் உயரதிகாரிகளிடம் கூறியதாகவும், அந்த உயரதிகாரிகள் பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் அதை தெரியப்படுத்தியதாகவும் கூறினார்.

நீண்ட இழுபறிக்குப் பிறகு, பிரதமர் போரிஸ் ஜான்சனே பிபிசி ஊடகத்துக்கு கொடுத்த பேட்டியில் கிறிஸ் பின்சருக்கு எதிராக நீண்ட காலத்துக்கு முன் ஒரு வாய் மொழிப் புகார் கூறப்பட்டதாகவும், அதற்கு எதிராக தான் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும், உரிய நடவடிக்கை எடுக்காதது தவறு என மன்னிப்பும் கோரினார்.

போரிஸ் ஜான்சனே ஒப்புக் கொண்ட பிறகு, அவர் அமைச்சரவையில் சுகாதாரச் செயலராக பணியாற்றி வந்த சஜித் ஜாவித் தன் பதவியை ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து பிரிட்டன் கருவூலத்தின் தலைவராக (Chancellor of the Exchequer) இருந்த ரிஷி சுனக்கும் தன் பதவியை ராஜினாமா செய்தது சர்வதேச அளவில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா காலத்தில் இந்த இரு அரசு பிரதிநிதிகளும் திறம்பட செயல்பட்டு மக்கள் மத்தியில் பிரபலமடைந்தனர்.

ரிஷி சுனக், தன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தன் ராஜினாமா கடிதத்தை பதிவிட்டுள்ளார்.

அதில் "அரசு முறையாக, திறம்பட, சீர்நோக்கோடு நடத்தப்பட வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.


"பிரிட்டன் மக்கள் அரசாங்கத்திடமிருந்து நேர்மையை எதிர்பார்க்கிறார்கள்" என குறிப்பிட்டுள்ளார் சஜித் ஜாவித். நீங்கள் என் நம்பிக்கையை இழந்துவிட்டீர்கள் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் சஜித்.

சஜித் ஜாவித் மற்றும் ரிஷி சுனக் சரியான முடிவை எடுத்துள்ளதாக முன்னாள் பிரெக்ஸிட் அமைச்சர் டேவிட் ஃப்ராஸ்ட் தன் ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.

இந்த இரு கவர்ச்சிகரமாந அமைச்சர் மற்றும் அரசு உயர் அதிகாரியைத் தொடர்ந்து, ஜோனதன் கல்லிஸ் (Jonathan Gullis), சகிப் பாதி, நிகோலா ரிச்சர்ட்ஸ், வெர்ஜினியா க்ராஸ்பி, பிம் அஃபொலாமி என பலரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

லேபர் கட்சித் தலைவர் சர் கெய்ர் ஸ்டார்மரோ (Sir Keir Starmer) அரசு சீர்குலைந்து வருகிறது, போரிஸ் ஜான்சன் பதவி விலக வேண்டும் என கூறியுள்ளார். போரிஸ் ஜான்சன் பிரிட்டன் நாட்டையே ஏமாற்றிவிட்டார் என்கிற தொனியில் கடுமையாக தன் கருத்தை ஊடகங்களிடம் பதிவு செய்துள்ளார். பிரிட்டனில் முன் கூட்டியே தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

பிரிட்டன் கருவூலத்தின் தலைவராக, போரிஸ் ஜான்சனை ஆதரித்து பேசி வந்த நதிம் சஹாவியின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல ஸ்டீவ் பார்க்ளே பிரிட்டனின் புதிய சுகாதாரம் மற்றும் சமூக நலத் துறை செயலராக அமர்த்தப்பட்டுள்ளார். மிஷெல் டொனெலனுக்கு கல்வித் துறைச் செயலர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?