இதுவரை 11 ஃபிஃபா உலகக்கோப்பை போட்டிகளை பார்த்ததற்கான புதிய கின்னஸ் சாதனை ஒன்றை படைத்துள்ளார் பிரேசிலை சேர்ந்த டேனியல் என்ற 75 வயது முதியவர்
1978 ஆம் ஆண்டு முதன் முறையாக உலகக்கோப்பை தொடரை பார்க்க ஆரம்பித்தார் டேனியல் ஸ்ப்ரூசி. அப்போது முதல் 11 கால்பந்து உலகக்கோப்பை தொடர்களை விடாமல் பார்த்து ரசித்து வந்திருக்கிறார்.
கால்பந்து உலகக்கோப்பை தொடர் நடைபெறும் நாடுகளுக்கு தவறாமல் சென்று போட்டிகளை கண்டுகளித்திருக்கிறார் டேனியல். இடையில் 1982 ஆம் ஆண்டு நடந்த தொடரை மட்டும் இவர் பார்க்கவில்லை. இருப்பினும், அது இவரது கின்னஸ் சாதனைக்கு தடையாக அமையவில்லை.
இதன்மூலம் மிக அதிகமான ஃபிஃபா உலகக்கோப்பை தொடர்களை பார்த்த நபர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார் டேனியல்.
அது மட்டுமல்ல, இப்படி உலகக்கோப்பை நடக்கும் நாடுகளுக்கு எல்லாம் சென்றதன் மூலம், அந்தந்த நாடுகளின் கலாச்சாரத்தை பற்றி அறிந்துகொண்டும், பல புதிய, மனதிற்கினிய அனுபவங்களையும் சேகரித்துள்ளார்
அடுத்ததாக 2026ல் நடைபெறும் உலகக்கோப்பை கால்பந்து தொடரையும் பார்க்கவேண்டும் என்பது தான் இவரது இலக்கு.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust