உலக பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவின் முகேஷ் அம்பானி, கௌதம் அதானிக்கு இடையில் இடம் பிடித்திருப்பவர் அமான்சியோ ஓர்டேகா. உலகப்பணக்காரர்கள் வரிசையில் இவர் 14வது இடத்தைப் பிடித்துள்ளார். ஸ்பெயினைச் சேர்ந்த இவர் ஒரு சில்லறை விற்பனை தொழிலதிபர்.
இவரது சொத்துமதிப்பு 85.4 பில்லியன் டாலர்கள் இந்திய மதிப்பில் 7,10,288 கோடி ரூபாய்.
1936ம் ஆண்டு மார்ச் 29ம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தை சாதாரண ரயில்வே ஊழியர். தாய் இல்லத்தரசி. 13 வயதில் ஒரு துணிக்கடையில் டெலிவரி ஊழியராக பணிசெய்தவர், பின்னர் ஒரு தையல் கடையில் வேலை செய்தபோது ஆடை சந்தையில் இருக்கும் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டார்.
தனது முதல் துணிக்கடையை தொடங்கும் போதே வசதிபடைத்தவர்களுக்கான கடையாகத் தொடங்கினார். 1963ம் ஆண்டிலேயே குளியலறை ஆடைகளை விற்க ஆரம்பித்தார். இவரது வெற்றியின் தொடக்கமாக 1975ம் ஆண்டு முதல் ஜாரா ஸ்டோரை தொடங்கினார்.
பத்து ஆண்டுகளுக்கு பிறகு இன்டிடெக்ஸ் என்ற ஹோடிங் நிறுவனத்தை உருவாக்கினார். 1988 மற்றும் 1990 க்கு இடையில், அவர் தனது வணிகத்தை போர்ச்சுகல், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு விரிவுபடுத்தினார்.
சிறந்த தொழிலதிபராக இருந்த அவர் பின்னர் Pull&Bear மற்றும் Bershka போன்ற பிராண்டுகளை தொடங்கினார், மேலும் Massimo Dutti மற்றும் Stradivarius ஆகிய நிறுவனங்களை வாங்கினார்.
2001 ஆம் ஆண்டு இன்டிடெக்ஸ் முதல் ஐபிஓ (initial public offering) வெளியிட்டு 2.7 பில்லியன் டாலர்கள் நிதிதிரட்டினார். 2010ம் ஆண்டுக்குள் இந்த நிறுவனம் 77 நாடுகளில் 5000 கடைகளுக்கு மேல் திறந்தது.
தனக்கு கிடைத்த ஈவுத்தொகையை (dividend) வைத்து ஸ்பெயின், அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் ஆடம்பரமான அலுவலகங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் கடைகளைத் தொடங்கினார்.
உலம் முழுவதும் உள்ள பணக்காரர்களின் நம்பிக்கைக்குரிய நிறுவனமாக உருவெடுத்தது. 2011 ஆம் ஆண்டு வரை நிறுவனத்தின் சேர்மனாக இருந்த அமான்சியோ ஓர்டேகா, தன் மகள் மார்டா ஒர்டேகா பெரெஸிடம் நிறுவனப் பொருப்புகளை ஒப்படைத்தார். மார்டா இந்த நிறுவனத்தின் விற்பனையாளராக தனது பணியைத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust