Akshata Murty - Rishi sunak
Akshata Murty - Rishi sunak  Twitter
உலகம்

Rishi Sunak - Akshata Murty: பிரிட்டன் ஆசிய கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்திய தம்பதி!

Priyadharshini R

இங்கிலாந்தின் தற்போதைய பிரதமரான ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி ஆகியோர் 2022ம் ஆண்டுக்கான ஆசிய கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம் பெற்றனர்.

முதலிடத்தில் இந்துஜா குடும்பத்தினர் தொடர்ந்து 8 ஆண்டாக உள்ளனர். அக்ஷதா மூர்த்தியின் தந்தையான இன்போசிஸ் நிறுவனத்தின் இணைநிறுவனரான என்.ஆர் நாராயண மூர்த்தி, 7.90 கோடி பவுண்ட் ஸ்டெர்லிங்குடன் 17-வது இடத்தில் உள்ளார்.

இந்த ஆண்டு பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களின் மொத்த சொத்து மதிப்பு 113.2 பில்லியன் பவுண்டுகள். இது முந்தைய ஆண்டை விட 13.5 பில்லியன் பவுண்டுகள் அதிகம்.

Rishi Sunak

இந்துஜா குடும்பம், கடந்த ஆண்டை விட 3 பில்லியன் பவுண்டுகள் அதிகரித்து 30.5 பில்லியன் பவுண்டுகள் மதிப்பீட்டில் தொடர்ந்து எட்டாவது முறையாக பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் பார்க் பிளாசாவில் 24-வது ஆண்டு ஆசிய பிஸ்னஸ் விருது வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடந்தது. இதில் லண்டன் மேயர் சாதிக் கான் , “2022 ஆசிய கோடீஸ்வரர்கள் பட்டியல்” குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் எம்.பி. ஆலிவர் டோவ்டன் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் பிரிட்டனைச் சேர்ந்தவர்களின் கடின உழைப்பு, உறுதிப்பாடு மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றை நான் நேரடியாகப் பார்த்திருக்கிறேன். ஆசியாவைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரதமராக வந்துள்ளார், 210 ஆண்டுகளில் மிக இளைய பிரதமர் இவர்தான் எனவும் அவர் கூறினார்.

மேலும், "நான் உங்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். பிரிட்டிஷ் ஆசிய வணிக சமூகம் மிகவும் வெற்றிகரமான தொழில்முனைவோர் குழுக்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது" என்றார்.

2022, ஆசிய கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்த முறை 16 பேர் இடம் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ஒருவர் கூடுதலாக இடம்பெற்றுள்ளார் எனவும் தெரிவித்தார்.

ஸ்ரீ பிரகாஷ் லோகியா குடும்பத்தினர் சொத்து மதிப்புதான் அதிகபட்சமாக 400 கோடி பவுண்ட்கள் அதிகரி்த்து, 880 கோடி பவுண்டகளாக உயர்ந்துள்ளது. லட்சுமி மிட்டல் அவரின் மகன் ஆதித்யா 1280 கோடி பவுண்ட்கள், பிரகாஷ் லோகியா 880 கோடி பவுண்ட்கள், நிர்மல் சேத்தியா 650 கோடி பவுண்ட் சொத்துக்களுடன் உள்ளனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

2500 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் திசை மாறிய கங்கை நதி - ஆய்வு சொல்வதென்ன?

Nikhila vimal: அழகிய லைலா நிகிலா விமலின் ரீசண்ட் புகைப்படங்கள்!

3.5 ஆண்டுகள் வரை கர்ப்ப காலம் கொள்ளும் விலங்குகள் பற்றி தெரியுமா?

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?