Calvine Photograph Twitter
உலகம்

ஏலியன் : 32 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான தெளிவான UFO புகைப்படம் - உடையுமா மர்மங்கள்?

Antony Ajay R

பறக்கும் தட்டுகள் குறித்து பல கதைகள், கூற்றுகள், சாட்கள் கூறப்பட்டு வருகின்றன. ஏலியன்களின் இருப்பை நம்புகின்றவர்கள் பலரும் பல் பறக்கும் தட்டுகளின் புகைப்படங்களை பகிர்வது வழக்கம்.

ஆனால் அந்த புகைப்படங்கள், வீடியோக்கள் எல்லாம் நம்பகத்தன்மை இல்லாமல் இருப்பதற்கான பொதுவான காரணம் அதன் தரம் தான். தெளிவற்ற புகைப்படங்களே இணையத்தில் ஏலியன் அல்லது UFO படங்கள் என இணையத்தில் உலாவி வந்தன. அந்த புகார்இந்த புகைப்படத்தில் உடைந்திருக்கிறது.

உலகின் மிக தெளிவான யுஎஃப்ஓ புகைப்படம் எட்டுக்கப்பட்ட 32 ஆண்டுகள் கழித்து வெளியாகியிருக்கிறது. இது கால்வைன் புகைப்படம் என்று அழைக்கப்படுகிறது.

ஆய்வாளரும் ஊடகவியலாளருமான டாக்டர் டேவிட் க்ளார்க் என்பவர் இந்த படத்தை உலகின் வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கிறார்.

கறுப்பு வெள்ளை படமான இதில் வைரம் போன்ற வடிவத்தில் பெரிதாக யு.எஃப்.ஓ இருப்பது தெரிகிறது. அதற்கு பின்னால் ஒரு விமானம் பறக்கிறது.

UFO

இந்த புகைப்படம் ஸ்காட்லாந்து நாட்டுக்கு அருகில் உள்ள கால்வைன் என்ற இடத்தில் மலையேற்றம் செய்யும் இருவரால் 1990ம் ஆண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தை அவர்கள் ஸ்காட்லாந்து டெய்லி ரெகார்ட் செய்திதாளுக்கு கொடுத்துள்ளனர். அவர்கள் பாதுகாப்புத் துறைக்கு அனுப்பியிருக்கின்றனர். அதன் பின்னர் அந்த புகைப்படம் மறைக்கப்பட்டது. அதனை யாரும் பார்க்கவில்லை என்றுக் கூறப்படுகிறது.

இந்த புகைப்படத்தை எடுத்தது யார் என்றுத் தெரியவில்லை. அதேப் போல கடந்த 30 ஆண்டுகளாக இது ஏன் மறைக்கப்பட்டிருந்தது என்ற கேள்விக்கும் இதுவரை பதில் தெரியவில்லை.

இந்த புகைப்படத்தை டாக்டர் க்ளார்க் பல ஆன்டு முயற்சிகளுக்குப் பிறகு வெளிக்கொண்டு வந்துள்ளார். RAF பத்திரிக்கையின் அதிகாரி லிண்ட்சே என்பவரிடமடிருந்து இது பெறப்பட்டுள்ளது.

UFO -க்கள் பற்றிய ஆய்வுகளை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்ல இந்த படங்கள் உதவியாக இருக்கும் என்றுக் கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு நாசா தீவிரமாக பறக்கும் தட்டுகள் குறித்து ஆராய்ச்சி செய்யப் போவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?