அரசு எந்திரங்களில் டிக் டாக்கை  தடை செய்த கனடா - தரவுகளை அனுமதியின்றி சேகரிக்கிறதா?
அரசு எந்திரங்களில் டிக் டாக்கை தடை செய்த கனடா - தரவுகளை அனுமதியின்றி சேகரிக்கிறதா? ட்விட்டர்
உலகம்

கனடா: அரசு தகவல்களை திருடியதா சீன செயலி டிக் டாக்? - தடை செய்ய காரணம் என்ன?

NewsSense Editorial Team

ஒரு நிமிடத்திற்கும் குறைவான காணொளி காட்சிகளின் மூலம் உலகப் புகழ்பெற்ற சமூக வலைத்தளம் டிக்டாக். இந்த வலைத்தளம் இந்தியாவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் முழுமையாகத் தடை செய்யப்பட்டது.

தற்போது, கனடா நாட்டு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட சாதனங்களில் டிக்டாக் தடை செய்யப்பட இருப்பதாக கனடா தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.

டிக்டாக் செயலியில் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு தனியுரிமை & பாதுகாப்பு அபாயங்கள் இருப்பதாக கனடா அரசாங்கத் தரப்பிலிருந்து செய்தி அறிக்கை மூலம் கூறப்பட்டுள்ளது.

டிக்டாக் செயலியை ஓட்டி பல பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தன. இது தான் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முதல் படி, இது மட்டும்தான் நாம் எடுக்க வேண்டிய ஒரே முடிவு என கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ருடோவே திங்கட்கிழமை நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார்.

கனடா நாட்டின் முதன்மை தகவல் அதிகாரியின் பரிசீலணையைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

டிக்டாக் செயலி தரப்பிலோ, கனடா அரசாங்கத்தின் இந்த முடிவு தங்களுக்கு பெருத்த ஏமாற்றமளிப்பதாகக் கூறியுள்ளனர். சில நாட்களுக்கு முன்பு தான் ஐரோப்பிய கமிஷனும் இதே போல, டிக்டாக் செயலி மீது ஒரு வித தடை விதித்தது இங்கு நினைவுகூரத்தக்கது.

இதுவரை டிக்டாக் செயலி மூலம், முக்கிய அரசு விவரங்கள் கசிந்ததாகவோ, வெளியானதாகவோ எந்த வித ஆதாரங்களும் இல்லை.

ஆனால் டிக்டாக் பயன்படுத்துவதால் சில அபாயங்கள் இருப்பது மட்டும் உறுதி செய்ய முடிவதாக கனடா தரப்பில் ஓர் உயரதிகாரி பிபிசி ஊடகத்திடம் கூறியுள்ளார்.

டிக்டாக் சர்ச்சை

டிக்டாக் செயலிக்கு பைட் டான்ஸ் என்கிற சீன நிறுவனம் உரிமையாளராக இருக்கிறது. ஏற்கனவே, டிக்டாக் செயலியில் கொடுக்கப்படும் தனிநபர் விவரங்களைப் பயன்படுத்தப்படுவது தொடர்பாக கடும் விமர்சனங்கள் நிலவி வந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆனால் பைட் டான்ஸ் நிறுவன தரப்பிலோ, தங்களுடைய சமூக வலைதள தகவல்களை சீன அரசாலோ, அரசு அதிகாரிகளாலோ அணுக முடியாது என்று கூறி வந்தது.

அதே போல டிக்டாக்கின் சீன வெர்சன், உலகின் மற்ற பகுதியினர் பயன்படுத்துவதை விட முற்றிலும் மாறுபட்டது என பல வாதங்களை முன் வைத்தது பைட் டான்ஸ் தரப்பு.

ஆனால் கடந்த ஆண்டு, சில சீன ஊழியர்களால் ஐரோப்பிய பயனர்களின் தரவுகளை அணுக முடியும் என்று ஒப்புக் கொண்டதும் இங்கு நினைவுகூரத்தக்கது.

இதே போல அமெரிக்க ஒன்றிய அரசுப் பணியாளர்கள் டிக்டாக்கைப் பயன்படுத்தக் கூடாது என கடந்த ஆண்டு தடை விதித்ததும் இங்கு நினைவுகூரத்தக்கது.

கனடா அரசு ஊழியர்கள் மற்றும் அரசு வழங்கிய சாதனங்களில், டிக்டாக் செயலியை தடை செய்தது தொடர்பாக டிக்டாக் நிறுவன தரப்பில் வெளியான செய்தியறிக்கையில், தங்கள் சமூக வலைதளம் தடை செய்யப்பட்டதற்கு எந்த ஒரு குறிப்பிட்ட பாதுகாப்புக் காரணங்களும் சுட்டிக்காட்டப்படவில்லை.

அதே போல தடையை அறிவிப்பதற்கு முன் தங்களைத் தொடர்பு கொண்டு பிரச்னைகள் தொடர்பாக விவாதிக்கவும் இல்லை என தங்கள் வருத்தத்தைப் பதிவு செய்துள்ளது பைட்டான்ஸ் நிறுவனம்.

நாங்கள் எப்போதும் கனடா நாட்டு அரசு அதிகாரிகளைச் சந்தித்து, நாங்கள் எப்படி பயனர்களின் தனியுரிமையைப் பாதுகாக்கிறோம் என்பது குறித்து விவாதிக்க தயாராக உள்ளோம் என்றும் அந்தச் செய்தியறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

2500 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் திசை மாறிய கங்கை நதி - ஆய்வு சொல்வதென்ன?

Nikhila vimal: அழகிய லைலா நிகிலா விமலின் ரீசண்ட் புகைப்படங்கள்!

3.5 ஆண்டுகள் வரை கர்ப்ப காலம் கொள்ளும் விலங்குகள் பற்றி தெரியுமா?

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?