BBC Presenter Twitter
உலகம்

பிபிசி நேரலையில் நெறியாளர் செய்த சம்பவம் - வைரலாகும் வீடியோ | Trending video

Priyadharshini R

பிபிசி நேரலையின் போது செய்தி தொகுப்பாளர் மேஜையில் கால் வைத்தபடி செல்போனை பார்த்துக் கொண்டிருந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இங்கிலாந்தில் பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையில் உள்ள அமைச்சர்கள் தங்கள் பதவியினை ராஜினாமா செய்து வருகின்றனர்.

இந்த சம்பவங்களால் போரிஸ் ஜான்சன் கடும் நெருக்கடியினை சந்தித்துள்ளார். ஆகவே போரிஸ் ஜான்சன் குறித்த அரசியல் நிகழ்வுகள் தான் தற்போது இங்கிலாந்தில் உள்ள ஊடகங்களில் தலைப்பு செய்தியாக உள்ளது.

அந்த வகையில் புகழ் பெற்ற பிபிசியின் செய்தி சேனலில் போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் ராஜினாமா குறித்த செய்தியினை பிரபல செய்தியாளர் டிம் வில்காக்ஸ் நேரலையில் விளக்கி வந்தார்.

அப்போது நிரூபர் ஒருவர் அரசியல் கள நிலவரங்களைக் கூறி வரும் போது கேமார செய்தி அரங்கம் காண்பிக்கப்பட்டது.

செய்தியினை தொகுத்து வழங்கும் நெறியாளர் டிம் வில்காக்ஸ் ரிலாக்ஸாக அருகிலிருந்த மேஜையில் காலினை வைத்தபடி தனது செல்போனை பார்த்து கொண்டிருந்துள்ளார்.

BBC digital

பின்னர் அவர் நேரலைக்கு செல்கிறோம் என்பதை உணர்ந்து சற்று பதட்டம் அடைந்து இயல்பு நிலைக்குத் திரும்புகின்றார். இது நேரலையில் சில விநாடிகள் வந்தாலும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இணைய வாசிகள் பலரும் நகைச்சுவையான மற்றும் கோபமான கமெண்ட்டுகளை தெரிவித்து வருகின்றனர்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?