சீனாவில் நூற்றாண்டு பழமையான 3800 டன் எடையுள்ள கட்டிடம் கூண்டோடு நகர்த்தப்பட்ட அதிசயம்! Twitter
உலகம்

சீனா: நூற்றாண்டு பழமையான 3800 டன் எடை கட்டடம் நகர்த்தப்பட்ட அதிசயம்- எப்படி சாத்தியமானது?

NewsSense Editorial Team

கிழக்கு சீனாவில் இருக்கும் நகரம் ஷாங்காய். தோராயமாக 2 கோடியே 50 இலட்சம் மக்கள் வாழக்கூடிய பிரம்மாண்டமான நகரம் ஷாங்காய். இங்கே நிதி, வணிகம், பொருளாதாரம், ஆய்வு, கல்வி, அறிவியல் தொழில்நுட்பம், உற்பத்தி, கலாச்சாரம், கலை, பேஷன், விளையாட்டு, போக்குவரத்து என எல்லாத் தொழில்களுமே இருக்கின்றன. ஷாங்காயில் இருக்கும் துறைமுகம் உலகிலேயே அதிகம் கப்பல் போக்குவரத்து கொண்டதாகும். ஷாங்காய் புடோங் விமானநிலையம் உலகில் முதல் 10 அதிக பயணிகள் பயணிக்கும் விமான நிலையங்களில் ஒன்றாகும்.

இந்நகரத்தில்தான் ஒரு கட்டிடத்தை அப்படியே பெயர்த்து கொண்டு சென்ற சாதனை நடைபெற்றிருக்கிறது. இந்தக் கட்டிடத்தின் வயது 100 ஆண்டுகள். எடை 3,800 டன். நடக்கும் எந்திரம் எனும் பிரம்மாண்டமான தொழில்நுட்பத்தின் மூலம் இக்கட்டிடம் அடியோடு பெயர்க்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டது. பிறகு ஜூலை 8 அன்று கட்டிடம் அதன் பழைய நிலைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதை புதுப்பிப்பதற்காகத்தான் அப்படி பெயர்த்து கொண்டு சென்றார்கள். இது உலகிலேயே மிகப்பெரிய மற்றும் கனமான கட்டுமான போக்குவரத்து திட்டமாகும்.

இதை நகர்த்துவதற்கு முதலில் துல்லியமான அளவீடு மற்றும் கணக்கிற்கு பிறகு, 3,800 டன் எடையுள்ள கட்டிடத்தைத் தள்ளுவதற்கு கட்டிடத்தின் அடியில் நெகிழ்வான பெரும் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டன.

இந்த நடக்கும் எந்திரம் இதற்கு முன்பும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 2020 ஆம் ஆண்டில் ஷாங்காய் நகரின் கிழக்கு ஹுவாங்பு மாவட்டத்தில் 85 வயதான ஐந்து மாடி தொடக்கப்பள்ளி கட்டிடம் இதே தொழில்நுட்பத்தில் மாற்றப்பட்டது.

கட்டிடத்தை தூக்கும் எந்திரத்திற்கு ரோபோவைப் போல கால்கள் உண்டு. அவை இரண்டு பிரிவுகளாக பிரிந்து தூக்கவும் செய்யும், கீழிறக்கவும் செய்யும். இது மனிதனைப் போல முன்னேறி செல்லும். எந்திரத்தில் இணைக்கப்பட்ட சென்சார்கள் கட்டிடம் எவ்வாறு முன்னோக்கி நகர்கிறது என்பதைக் கட்டுப்படுத்த உதவுகிறது. திட்டத்தின் தலைமை தொழில்நுட்ப மேற்பார்வையாளர் லான் வுஜி, “ இது கட்டிடத்திற்கு ஊன்று கோல் கொடுப்பது போன்றது. அதனால் எழுந்து நின்று பின் நடக்கவும் முடியும்" என்று கூறினார்.

கட்டமைப்பு நகர்வு என்பது ஒரு முழு கட்டிடத்தையும் அஸ்திவாரத்திலிருந்து தூக்கி வேறு இடத்திற்கு நகர்த்துவது ஆகும். வரலாற்று ரீதியான புராதன கட்டிடங்களை இப்படித்தான் பாதுகாக்க முடியும். தேவைப்பட்டால் அவற்றை மாற்றி பாதுகாப்பான இடத்தில் வைத்து விட்டு பழைய இடத்தை வளர்ச்சிக்கு விட முடியும். அதே போன்று ஒரு கட்டிடம் வெள்ளத்தால் பாதிக்கப்படும் வாய்ப்பிருக்கும் பட்சத்தில் இந்த தொழில்நுட்பம் அக்கட்டத்தை நகர்த்தி பாதுகாப்பான இடத்தில் வைப்பதற்கு கை கொடுக்கிறது.

பழைய தேவாலயங்கள் முதல் அணு உலைகள் வரை கிட்டத்தட்ட எந்த கட்டிடத்தையும் கட்டமைப்பு ரீதியாக நகர்த்த முடியும். என்றாலும் நகர்த்தப்படும் கட்டிடங்கள் அவற்றின் எடை காரணமாக சில நேரங்களில் மாற்றிச் செல்லும்போது சிரமத்தை ஏற்படுத்துகின்றன. ஆனாலும் தொலைப்பேசி நிறுவன தலைமையகம் முதல் விமான நிலைய முனையங்கள் வரை பொறியாளர்கள் இந்த கட்டமைப்பு நகர்த்துதலை செய்து யாரும் செய்ய முடியாத சாதனைகளாக செய்துள்ளார்கள்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?