Chess  Pexels
உலகம்

செஸ் விளையாட்டில் சிறுவனின் கை விரலை உடைத்த ரோபோ - என்ன காரணம்? | வைரல் வீடியோ

மாஸ்கோவை சேர்ந்த கிறிஸ்டோபர் எனும் 7 வயது சிறுவன் ஒரு ரோபோவுடன் செஸ் விளையாடினார். போட்டியின்போது அந்த ரோபோ திடீரென தனது எதிராளியை தாக்கியுள்ளது.

NewsSense Editorial Team

ரோபோவுடன் செஸ் விளையாடியபோது சிறுவனின் கை விரல் உடைக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது

மாஸ்கோவை சேர்ந்த கிறிஸ்டோபர் எனும் 7 வயது சிறுவன் ஒரு ரோபோவுடன் செஸ் விளையாடினார். போட்டியின்போது அந்த ரோபோ திடீரென தனது எதிராளியை தாக்கியுள்ளது.

சமீபத்தில் ரஷ்யாவில் Moscow Chess Open நடைபெற்றது. அதில் செஸ் விளையாடும் ரோபோ ஒன்று வைக்கப்பட்டிருந்தது. மக்கள் அதனோடு விளையாட மிகுந்த ஆர்வம் காட்டினர். அவ்வாறே இந்த சிறுவனும் ரோபோவோடு விளையாடினார். ஆனால் திடீரென ரோபோ சிறுவனின் கையை வலுவாகப் பிடித்துக்கொண்டது. இதனால் அச்சிறுவனின் கைவிரலில் பலத்த காயம் ஏற்பட்டது.


இது குறித்து மாஸ்கோ செஸ் கூட்டமைப்பின் தலைவர் செர்ஜி லாசரேவ் (Sergey Lazarev) கூறுகையில், "இந்த ரோபோ எத்தனையோ நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளது, ஆனால் எங்கேயும் இப்படி ஒரு சம்பவம் நிகழவில்லை" என தெரிவித்தார்.

மேலும் இந்த சிறுவன், ரோபோவிற்கு தக்க நேரம் கொடுக்காமல் விரைந்து விளையாட முற்பட்டதே விரலைப் பிடித்ததற்குக் காரணமாக இருக்கலாம் என்று தெரிவித்தார்.

காயமடைந்த சிறுவன் தக்க முதலுதவிகள் பெற்றுக்கொண்டு மறுநாள் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடியுள்ளான். மேலும் கிறிஸ்டோஃபர் ரஷ்யாவின் தலைசிறந்த 30 செஸ் வீரர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனினும் காயமடைந்த சிறுவனின் பெற்றோர் இந்த ஹ்ஹடவடிக்கை குறித்து அதிருப்தி தெரிவித்து, வழக்கு பதிவு செய்தனர். இதனால், தற்போடு அந்த ரோபோவை பயன்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?