peppa pig show twitter
உலகம்

Peppa Pig: குழந்தைகள் கார்ட்டூனில் இடம் பெற்ற ஓரினச் சேர்க்கை தம்பதி

Keerthanaa R

Peppa Pig என்ற குழந்தைகள் கார்ட்டூனில்,முதன் முறையாக ஓரினச் சேர்க்கை கதாபாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

காதல் என்பது எல்லா உயிரினங்களுக்கும் இருக்கும். பல வருடங்களாக இரு பாலருக்குள் மட்டுமே காதல் மலரும் என்று நம்பிக்கொண்டிருந்தது உடைந்துள்ளது. ஒரே பாலினத்தை சேர்ந்தவர்களுக்குள்ளும் காதல் மலரும், அது இயற்கையே என்ற புரிதல் மெல்ல சமூகத்தில் ஏற்பட்டு வருகிறது. அதனை ஏற்கும் மனநிலைக்கும் மனிதர்கள் மாறி வருகிறார்கள்.

நாம் பார்க்கும் படங்கள், தொடர்களில் ஓரினச்சேர்க்கை குறித்த பதிவுகள், அதை விளக்கும் வகையில் கதைகள் வர துவங்கி விட்டன. இதை பற்றிய சரியான புரிதலை சிறு வயது முதலே குழந்தைகளுக்கு ஊட்ட வேண்டும் என்ற விவாதமும் பரவலாக இருந்து வருகிறது

இதனையடுத்து, பிரபல குழந்தைகள் கார்ட்டூனான Peppa Pig என்ற நிகழ்ச்சியில், முதன் முறையாக ஒரே பாலினத்தை சேர்ந்த தம்பதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இரு பெண் பனிக்கரடிகள் தான் அந்த தம்பதி.

அதில் பென்னி என்ற பனிக்கரடி, மற்றொரு கரடியிடம், தன் அம்மாக்கள் இருவரில், ஒருவர் மருத்துவர் என்றும், மற்றொருவர் ஹோம் மேக்கர் என்றும் பெருமையுடன் கூறும் காட்சி ஒன்று இடம்பெற்றுள்ளது.

குழந்தைகள் நிகழ்ச்சியில் ஓரினச்சேர்கை குறித்த பதிவு இணையவாசிகள் மனதை கவர்ந்து வருகிறது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?