Asian Games: அருணாச்சல பிரதேச வீரர்களை தடை செய்த சீனா, எதிர்க்கும் இந்தியா - என்ன நடந்தது?
Asian Games: அருணாச்சல பிரதேச வீரர்களை தடை செய்த சீனா, எதிர்க்கும் இந்தியா - என்ன நடந்தது? Twitter
உலகம்

Asian Games: அருணாச்சல பிரதேச வீரர்களை தடை செய்த சீனா, எதிர்க்கும் இந்தியா - என்ன நடந்தது?

Antony Ajay R

சீனாவின் ஹாங்சோ என்ற பகுதியில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த 3 வீரர்களுக்கு சீனா தடை விதித்துள்ளது. இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தடைவிதிக்கப்பட்ட வுஷு (குங் ஃபு) வீரர்கள் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். இந்த மாநிலத்தை சீனா தனது தேசத்தின் பகுதியாக கருதி வருகிறது.

சீனாவில் பிறந்ததாக அறியப்படும் குங் ஃபு விளையாடுவதற்காக பயிற்சியாளரும் நாட்டின் பிற பகுதிகளைச் சேர்ந்த 7 வீரர்களும் கடந்த புதன் கிழமையே சீனா சென்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.

செய்திகளில் வெளியான தகவல்களின் படி, அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த 3 வீராங்கனைகளின் விண்ணப்பத்துக்கும் ஹாங்சோ ஆசிய விளையாட்டு ஏற்பாட்டுக் குழு ஒப்புதல் தந்துவிட்டது. ஆனால் அவர்களால் அங்கீகார அட்டையை தரவிறக்கம் செய்ய முடியவில்லை. சீனாவுக்குள் நுழைய இந்த அங்கீகார அட்டைதான் விசா போன்றது.

indian foreign ministry spokesperson arindam bagchi

இந்தியா எதிர்ப்பு?

இந்த நிகழ்வுக்கு இந்தியா வலிமையான எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளது. இந்திய வெளியுறவுத்துறை செய்திதொடர்பாளர் அரிந்தம் பக்சிம், "குடியுரிமை அல்லது இனத்தின் அடிப்படையில் இந்திய குடிமக்களிடம் பாகுபாடு காட்டுவதை எங்களால் ஏற்கமுடியாது" எனக் கூறியுள்ளார்.

"சீனாவின் நடவடிக்கை ஆசிய விளையாட்டுகளின் உற்சாகம் மற்றும் உறுப்பு நாடுகளின் போட்டியாளர்களுக்கு எதிரான பாகுபாட்டை தடை செய்யும் விதிகள் இரண்டையும் மீறுகிறது" என அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் வெளியுறவுத்துறை அமைச்சகம், அருணாச்சலபிரதேசம் எப்போதும் இந்தியாவுடன் ஒருங்கிணைந்த பிரிக்க முடியாத பகுதியாக இருக்கும் என்பதையும் வலியுறுத்தியது.

சீனாவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்திய அமைச்சர்கள் சீனாவுக்கு செல்வதை இந்தியா தடைசெய்துள்ளது.

சீனா சொல்லும் காரணம் என்ன?

சீனா அதன் நடவடிக்கையை நியாப்படுத்தும் விதமாக தடைவிதிக்கப்பட்ட மூவரிடமும் சரியான ஆவணங்கள் இல்லை எனக் கூறியுள்ளது. அதே நேரத்தில் ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் மூத்த அதிகாரி 3 பேருக்கும் சீனாவுக்கு வருவதற்கான விசா வழங்க்கப்பட்டுள்ளது என்றும் அவர்கள் தடைசெய்யப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.

சீன வெளியுறவுத்துறை செய்திதொடர்பாளர் மாவோ நிங், "நீங்கள் அருணாச்சல பிரதேசம் என்று அழைக்கும் பகுதியை சீன அரசு அங்கீகரிக்கவில்லை. தெற்கு திபெத் சீனாவின் ஒரு பகுதி" என்று கூறியுள்ளார்.

இந்த மூன்று குங் ஃபு வீராங்கனைகளும் கடந்த ஜூலை மாதம் சீனாவில் நடந்த உலக பல்கலைக்கழக போட்டிகளிலும் கலந்துகொள்ளவில்லை. அந்த நேரத்தில் விசாவை ஒட்டுவதற்கு பதிலாக ஸ்டேபில் செய்யப்பட்டதால் அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

2500 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் திசை மாறிய கங்கை நதி - ஆய்வு சொல்வதென்ன?

Nikhila vimal: அழகிய லைலா நிகிலா விமலின் ரீசண்ட் புகைப்படங்கள்!

3.5 ஆண்டுகள் வரை கர்ப்ப காலம் கொள்ளும் விலங்குகள் பற்றி தெரியுமா?

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?