Covid 19 Newssense
உலகம்

Corona சீனாவில் உண்மையில் அதிகரித்து இருக்கிறதா? - இதுதான் உண்மை நிலவரம்

NewsSense Editorial Team

சீனாவில் விதிக்கப்பட்டிருந்த கடுமையான ஊரடங்கு உத்தரவுகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவது தொடர்பாக பலரும் தங்கள் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.

சீனாவில் ஏற்பட்டிருக்கும் புதிய கொரோனா வைரஸ் தொற்று அலை காரணமாக, அந்நாட்டில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளும் நிரம்பி வருவதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

எத்தனை நோயாளிகள் எத்தனை மரணங்கள்:

2022 டிசம்பர் 21 நிலவரப்படி கடந்த ஒரு வார காலத்தில், அந்நாட்டில் ஏழு பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து இருக்கிறார்கள். அதற்கு முந்தைய இரண்டு வாரங்களில் யாரும் இறக்கவில்லை என்கிறது சீனாவின் அதிகாரப்பூர்வமான தரவுகள்.

இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சுவாச நோய் தொடர்பாக நேரடியாக இறந்தவர்களை மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் என கணக்கில் எடுத்துக் கொள்கிறது சீனா.

கொரோனாவால் ஏற்படும் இரண்டாம் கட்ட விளைவுகள், மறைமுக தாக்கங்கள் மற்றும் ஒட்டுமொத்த கொரோனா நோயால் ஏற்படும் பாதிப்புகளால் ஏற்படும் இறப்புகளை, சீனா கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.

இந்த தரவுகள் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல் படி கணக்கிடப்படுவதில்லை என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. எனவே, சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக பதிவாகிறது.

சீனாவில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 2022 டிசம்பர் 11ஆம் தேதி நிறைவடைந்த வாரம் ஒரு பெரிய சரிவைக் கண்டது. அதற்கு முந்தைய வாரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு பெரிய உச்சத்தை தொட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை, சீனா கணக்கில் எடுத்துக் கொள்ளும் முறையில் ஏற்பட்ட மாற்றம் குறித்தும் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது.

கொரோனா

மிகப்பெரிய அளவில் கொரோனா பரிசோதனைகளை மேற்கொண்டு வந்த சீனா, இப்போது அதை நிறுத்திவிட்டது. மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களில் கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்கிறது.

கொரோனா அறிகுறிகள் தென்படாமல் (assymptomatic cases) கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், வீட்டிலேயே சுயமாக கொரோனோ பரிசோதனை செய்த போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தவர்கள் எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்கிறது பிபிசி வலைதளம்.

சீன மருத்துவமனைகள் எத்தகைய அழுத்தத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றன?

சீனாவில் அதிகாரப்பூர்வமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கும் போதும், சீனாவின் சுகாதார அமைப்புகள் மிக கடுமையான அழுத்தத்தை எதிர்கொள்ளலாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

அவசர சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் எதார்த்தத்தில் சீன மருத்துவமனைகளில் உள்ள ஐ சி யு பிரிவுகள் நிரம்பிக் கொண்டிருக்கின்றன.

சீன மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக சிகிச்சை பெற்று வருவதை போன்ற பல்வேறு காணொளிகளை சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது.

Corona

இதில் ஒரு சில காணொளிகளை பிபிசி போன்ற சர்வதேச ஊடகங்கள் தங்களின் வலைதளங்களிலேயே பகிர்ந்துள்ளன.

சீனாவின் பல்வேறு சுகாதார மையங்களின் வாசலில் சிகிச்சை பெற மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாகவும், மருந்தகங்களில் மருந்துகளுக்கு பெரிய தேவை இருப்பதாகவும் பிபிசி வலைதள கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பல தற்காலிக சுகாதார மையங்கள் உருவாக்கப்பட்டு இருப்பதாகவும், அந்த மையங்களில் அவசர சிகிச்சை பிரிவு வசதி கூட இருப்பதாகவும் அதே கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

சீனாவில் தலைநகரான பீஜிங்கில் இருக்கும் சாயங் (Chaoyang) மருத்துவமனையில் சிகிச்சை பெற வரும் நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களில் நான்கு மடங்கு அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல ஷாங்காய் மாகாணத்தில் சுமார் 2.3 லட்சம் மருத்துவமனை படுக்கைகள் தயார் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது

சீனாவின் கொரோனா கொள்கைகள் எப்படி மாறி இருக்கின்றன?

சீனா அவ்வப்போது விதிக்கும் மிகக் கடுமையான கொரோனா ஊரடங்கு உத்தரவுகளை எதிர்த்து கடந்த மாதம் பல்வேறு மக்கள் போராட்டங்கள் வெடித்தன. அதனைத் தொடர்ந்து சீனா முழுக்க பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

இந்தத் தளர்வுகளை சீனா அறிவிப்பதற்கு முன் ஒட்டுமொத்த உலகிலேயே கொரோனாவுக்கு எதிராக மிகக் கடுமையான கொள்கையை சீனா பின்பற்றி வந்தது. அதன் பெயர் ஜீரோ கோவிட் பாலிசி.

மிகச் சிலருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் பரவி இருந்தாலும் மிகக் கடுமையான ஊரடங்கு உத்தரவுகளை பிறப்பிப்பது, மிகப் பெரிய எண்ணிக்கையில் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்வது, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய வீட்டிலேயே சுயமாக தனிமைப்படுத்திக் கொள்வது அல்லது அரசாங்கத்தின் சுகாதார மையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வது என மிக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

ஆனால் தற்போது ஊரடங்கு உத்தரவுகள் கட்டிடங்கள் அல்லது கொரோனா பரவி இருக்கும் தளங்கள் என சுருங்கியுள்ளது.

பொதுப் போக்குவரத்து வாகனங்கள், உணவகங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், பொது பயன்பாட்டுக் கட்டிடங்கள்... போன்ற இடங்களுக்கு செல்ல பி சி ஆர் பரிசோதனைகள் தற்போது தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கொரோனா பரிசோதனைக்கான ரேபிட் டெஸ்ட் கிட்ஸ்களுக்கு மிகப்பெரிய அளவில் பற்றாக்குறை நிலவுவதால், சீனாவில் உள்ள பல்வேறு மாகாணங்களும் சிறிய அளவில் கொரோனா அறிகுறிகள் இருப்பவர்கள் அல்லது அறிகுறிகளே இல்லாதவர்கள் வேலைக்கு திரும்பலாம் என தங்கள் புதிய கொள்கைகளை நடைமுறைப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

Corona vaccine

சீனாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி விகிதம்:

சீன மக்களில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக கூறுகிறது சீன தரப்பு.

ஆனால் எதார்த்தத்தில், 2022 நவம்பர் நிலவரப்படி 80 வயதிற்கு மேற்பட்டவர்களில் பாதிக்கும் குறைவானவர்களே மூன்று டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசியை பெற்றுள்ளனர்.

80 வயதுக்கு மேற்பட்டவர்களில் 20 சதவீதத்தினருக்கும் குறைவானவர்கள் மட்டுமே கடந்த ஏப்ரல் மாத காலத்தில் முழுமையாக கொரோனா வைரஸ் தடுப்பூசி பெற்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

covid Situation

80 வயதிற்கு மேற்பட்ட சீனர்களில் 65.8% மக்கள் மட்டுமே இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். 76.6% மக்கள் மட்டுமே ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டிருப்பதாக பிபிசி தரவுகள் சொல்கின்றன.

சீனோவேக் (Sinovac) மற்றும் சினோஃபார்ம் (Sinopharm) ஆகிய கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை மிகப்பெரிய அளவில் சீனா பயன்படுத்தி வருகிறது. அந்த தடுப்பூசிகள் ஒமிக்ரான் திரிபுக்கு எதிராக எத்தகைய செயல்திறனைக் கொண்டிருக்கிறது என்கிற சந்தேகம் தற்போது எழுந்திருக்கிறது.

மேற்கத்திய நாடுகள் மிகப்பெரிய அளவில் பயன்படுத்தும் தடுப்பூசிகளை சீனா பரவலாக பயன்படுத்த மறுத்து வருவதும் இங்கு நினைவுகூரத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?