Coffee Maker Pexels
உலகம்

Coffee Maker மூலம் உளவு பார்க்கும் சீனா : எப்படி தெரியுமா? - உஷார்

NewsSense Editorial Team

காபி மேக்கரில் பதிக்கப்பட்ட மென்பொருள் மூலம் சீனா உளவு பார்க்கக்கூடும் என்று நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார்.


அமெரிக்க ஆராய்ச்சியாளர் கிறிஸ்டோபர் பால்டிங் என்பவர், "காபி தயாரிக்கும் இயந்திரத்தின் தரவு டேட்டா சாதாரணமானதாகத் தோன்றலாம், ஆனால் அது எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதில் பல அபாயமான அம்சங்களும் உள்ளன" என்று ஒரு அறிக்கையில் கூறியிருக்கிறார்.


அவரின் அந்த அறிக்கையின்படி, சீனா ஸ்மார்ட் காபி தயாரிக்கும் எந்திரங்களுக்குள் தரவை சேகரிக்க இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (IoT) என்ற மென்பொருளைப் பயன்படுத்த வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளார்.

Internet of Things

பால்டிங் மேலும் கூறுகையில், "காபி மேக்கர்களின் சாதாரண டேட்டா கூட எதிரி அரசின் கைகளில் ஆபத்தானதாக இருக்கும் என்பதை நிரூபிக்க முடியும்." என்றார்.


இதன் மூலம் காபி மேக்கரை உபயோகப்படுத்துபவரின் இருப்பிடம், பயன்பாட்டு நேரத்தைப் பொறுத்த அவருடைய செயல்பாடுகள் போன்றவற்றைக் கண்டறியும் வாய்ப்புகள் இருப்பதாக பால்டிங் தெரிவித்தார்.


சீனாவின் பல இயந்திரங்கள் ஒருங்கிணைக்கப்பட்ட பயனர்களின் குரல் கட்டளைகளை அடையாளம் காண அனுமதிக்கின்றன. அதே நேரத்தில் அவை, சீன நிறுவனங்கள் அல்லாத பயனர்களிடமிருந்து குரல் தரவைச் சேகரித்தால் அது குறிப்பிடத்தக்கப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும், என்று அந்த அறிக்கை எச்சரித்தது.

Data Breach

IoT சாதனங்கள் பொதுவாக 'பாதுகாப்பு இணைப்புகளால்' மூடப்படுவதில்லை என்றும், "வாடிக்கையாளர் முகவரி, வாடிக்கையாளர் அடையாளம் மற்றும் நிறுவனப் பெயர் பற்றிய தகவல்களுடன் கூடிய இயந்திரங்களில் உள்ள இணைய இணைப்புகள் ஆகியவை மிக துல்லியமாகக் காபி இயந்திரங்களைக் கண்டறியும் திறனை வழங்குகிறது" என்று பால்டிங் கூறினார்.


Data Privacy, Storage மற்றும் காபி மேக்கர்களின் செயல்முறை ஆகியவை தெளிவான வரையறைக்குள் இல்லாததால் இது தனியுரிமைக்கு பாதுகாப்பானது இல்லை என்றும் கூறினார்.

Coffee Maker

”அனைத்து ஆதாரங்களும், அவர்களின் இயந்திரங்கள் சீனாவின் பிரதான நிலப்பகுதிக்கு வெளியே உள்ள பயனர்களின் தரவுகளைச் சேமிக்க முடியும் என்பதைக் குறிக்கிறது” என்று பால்டிங் உறுதிப்பட தெரிவித்திருக்கிறார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?