சமீபத்தில் சீன உளவு பலூனை அமெரிக்க பாதுகாப்பு படையான பெண்டகன் சுட்டு வீழ்த்தியது உலகம் முழுவதும் பரவலாக பேசப்பட்டது.
அதைத் தொடர்ந்து தங்களது வானத்தில் நீர்நிலைகளுக்கு மேலே பறக்கும் தட்டு போன்ற பொருட்களைப் (Unidentified flying object) பார்த்ததாக சீனா கூறியுள்ளது.
துறைமுக நகரமான கிங்டாவோக்கு அருகினில் பறந்த, அதனை சுட்டு வீழ்த்த சீன அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதிகாரிகள் அந்த பகுதி மீனவர்களை பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றனர்.
சீன பலூனை அமெரிக்கா மற்றும் கனடா இராணுவங்கள் இணைந்து சனிக்கிழமை சுட்டு வீழ்த்தின.
வானவெளியின் உயர் அடுக்குகளில் இருந்த பலூனை அமெரிக்க F22 வகை ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தின.
இதைத் தொடர்ந்து கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனடிய வான்வெளியில் அதுமீறி நுழைந்த பொருளைத் தான் அகற்ற உத்தரவிட்டதாக ட்வீட் செய்துள்ளார்.
இது குறித்து அமெரிக்க பாதுகாப்புச் செயலர் லாயிட் ஆஸ்டின் சீனாவுக்கு அழைப்புவிடுத்தார். ஆனால் சீனா பதிலளிக்கவில்லை. மேலும் என்ன செய்வது என்பது குறித்து வெள்ளை மாளிகையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
சீனாவில் இப்போது கண்டறியப்பட்டதாக கூறப்படும் பொருள் ஒரு உளவு பலூனா அல்லது பறக்கும் தட்டா என எந்த விளக்கமும் கூறப்படவில்லை.
புகைப்படங்கள் கூட வெளியிடப்படவில்லை. சீனா ஆபத்தில் இருக்கிறதா அல்லது இது வேற்றுக் கூச்சலாக இருக்குமா என்பதைப் பொருத்துதான் பார்க்க வேண்டும்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust