China : முத்துமிடும் கருவி - எப்படி வேலை செய்கிறது, விலை என்ன?  Twitter
உலகம்

China : முத்துமிடும் கருவி - எப்படி வேலை செய்கிறது, விலை என்ன?

Antony Ajay R

இனி உலகின் எந்த மூலையில் இருந்தும் உங்கள் காதலரை முத்தமிடலாம்!

உதட்டோடு உதடு முத்தமிடும் பழக்கம் மனிதர்கள் தங்கள் காதலை வெளிப்படுத்தப் பயன்படுத்தும் சக்திவாய்ந்த செயலாகும்.

பல வகைகளில் முத்தமிட்டு அன்பையும் காதலையும் கொண்டாடுவர். ஆனால் ஒருவரை ஒருவர் பிரிந்திருக்கும் போது இணையின் சீண்டல் இல்லாமல் வாடியிருப்பர்.

இனி அந்த கவலை தேவையில்லை. எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் நம் இணைக்கு நாம் முத்தமிட முடியும் வகையில் கருவியை கண்டுபிடித்துள்ளது சீன ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று.

ஜியாங் ஜாங்லி என்பவர் தனது காதலியுடன் லாங் டிஸ்டன்ஸ் ரிலேஷன்ஷிப்பில் இருந்த போது இந்த கருவியைக் கண்டறியும் யோசனைத் தோன்றியதாம்.

இது கொரோனா காலத்தில் பிரிந்திருந்த தம்பதிகளுக்காக உருவாக்கப்பட்டிருக்கிறது. இதனைப் பயன்படுத்த மொபைல் செயலியும் உள்ளது.

இந்த கருவியில் உள்ள உதடு வடிவம் சிலிக்கானால் ஆனது. இதில் இருக்கும் மோஷன் சென்சார் மூலம் அசைவுகள் பதிவு செய்யப்பட்டு அடுத்த கருவிக்கு சிக்னல் அனுப்பப்படுகிறது.

கடந்த ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கருவிகள் அறிமுகமான இரண்டு வாரங்களில் 3000 வரை விற்றதாம்.

ஆனாலும் சிலர் இதெல்லாம் வேலைக்கு ஆகாது எனக் கூறிவருகின்றனர். இது உண்மையான முத்தத்தைப் போல இருக்காது எனவும் இதற்கு அடிமையாகும் வாய்ப்புகள் இருக்காது எனவும் சிலர் தெரிவிக்கின்றனர்.

இந்த கருவியில் முத்தமிடும் போது முத்தத்தின் சத்தத்தைக் கேட்கமுடியும். சிலிக்கான் உதடுகளில் வெப்பத்தையும் அனுபவிக்க முடியுமாம்.

இதன் விலை 260 சீன யுவான்கள். இந்திய மதிப்பில் 3100 ரூபாய்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?