காதலிக்கு முத்தம் கொடுத்தா காது கேட்காம போகுமா? இளைஞருக்கு நேர்ந்த சோகம் - என்ன நடந்தது? canva
உலகம்

காதலிக்கு முத்தம் கொடுத்தா காது கேட்காம போகுமா? இளைஞருக்கு நேர்ந்த சோகம் - என்ன நடந்தது?

கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி தன் காதலியுடன் இளைஞர் ஒருவர் டேட்டிங் சென்றுள்ளார். இவர்கள் சீனாவின் கிழக்கு பிராந்தியமான ஜெய்ஜாங்கில் இருக்கும் வெஸ்ட் லேக் பகுதிக்கு சென்றனர்.

Keerthanaa R

தனது காதலிக்கு முத்தம் கொடுத்ததால், செவித்திறனை இழந்துள்ளார் சீனாவை சேர்ந்த இளைஞர் ஒருவர்.

அன்பின் உச்சகட்ட வெளிப்பாடாக முத்தம் பார்க்கப்படுகிறது. இதில் பல்வேறு வகைகளும் உள்ளன. முத்தமிட்டு கொள்வது காதலர்கள், தம்பதியினரிடையே ஒரு முக்கியமான அன்பின் பரிமாற்றம். குறிப்பாக உதட்டோடு உதடு முத்தமிடுவதை கவனித்திருப்போம்.

முத்தமிடுவதால், மருத்துவ ரீதியிலும் நன்மைகள் என ஆராய்ச்சிகள் கூறியுள்ளன.

ஆனால் முத்தமிட்டதால், இளைஞர் ஒருவருக்கு காது கேட்காமல் போயுள்ளது.

சவுத் சைனா மார்னிங் போஸ்ட்டில் அறிக்கை ஒன்று வெளியானது. அதன்படி, காதலிக்கு முத்தம் கொடுத்ததால் அவரது காது கேட்காமல் போயுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி தன் காதலியுடன் இளைஞர் ஒருவர் டேட்டிங் சென்றுள்ளார். இவர்கள் சீனாவின் கிழக்கு பிராந்தியமான ஜெய்ஜாங்கில் இருக்கும் வெஸ்ட் லேக் பகுதிக்கு சென்றனர்.

அப்போது காதலிக்கு உதட்டில் முத்தம் கொடுத்துள்ளார். தொடர்ந்து 10 நிமிடத்திற்கு விடாமல் இருவரும் முத்தமிட்டதாக கூறப்படுகிறது. அப்போது அவருக்கு காதில் பயங்கரமான வலி ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து விரைந்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இளைஞரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது காதுகளில் இருக்கும் செவிப்பறையில் துளை ஏற்பட்டுள்ளது என்று கூறினர். இது முழுமையாக குணமடைய இரண்டு மாதங்கள் ஆகும் எனவும் தெரிவித்திருக்கின்றனர் மருத்துவர்கள்.

அழுத்தமாக உதட்டோடு உதடு நீண்ட நேரம் முத்தமிடுகையில், முத்தமிட்டுக்கொள்ளும் இருவரின் மூச்சு காற்றும் சுவாசத்தில் ஒருவிதமான அழுத்தத்தை உண்டாக்கும். இந்த அழுத்தம், செவிப்பாறையில் பாதிப்பை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் விளக்கமளித்தனர்.

இப்படி முத்தமிட்டதால் செவித்திறனை இழந்த முதல் நபர் இல்லை இந்த இளைஞர். 2008ல் ஒரு முறை இளம் பெண் ஒருவருக்கும் இப்படி நேர்ந்துள்ளது. தனது காதலனை முத்தமிடுகையில் அவரது செவிப்பாறை துளையாகி காது கேளாமல் போயுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?