சீனா: சம்பளதுட்டன் ஒரு மாதம் லீவ்! புதுமண தம்பதிகளுக்கு புதிய திட்டம் - என்ன காரணம்? twitter
உலகம்

சீனா: சம்பளத்துடன் ஒரு மாதம் லீவ்! புதுமண தம்பதிகளுக்கு புதிய திட்டம் - என்ன காரணம்?

புதுமண தம்பதிகளுக்கு 30 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்படும் என அந்நாட்டு மாகாணங்கள் சில அறிவித்துள்ளன.

Keerthanaa R

நாட்டின் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க புதுமண தம்பதிகளுக்கு 30 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கிறது சீன மாகாணங்கள்.

சீன அரசு பல தசாப்தங்களாக பின்பற்றிவந்த மக்கள் தொகை கட்டுபாட்டு விதிமுறைகளை கடந்த சில ஆண்டுகளாகவே தளர்த்தி வருகிறது.

ஒரு தம்பதி மூன்று குழந்தைகள் வரை பெற்றுகொள்ளலாம் என்பது முதல் சமீபத்தில் திருமணமாகாதவர்களும் குழந்தை பெறலாம் என்பது வரை பல மாற்றங்கள் வந்துள்ளன.

சீன விந்தணு வங்கிகள் கல்லூரி மாணவர்கள், தகுதியுள்ளவர்கள் விந்தணுக்களை தானமளிக்கலாம் என அறிவிப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இவ்வனைத்துமே நாட்டின் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க அந்நாட்டு அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள்.

நாட்டின் மக்கள் தொகை கணிசமாக குறைந்ததாலும், வயதானவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாலும் சீனா இந்த மாற்றங்களை கொண்டுவருகிறது.

இதனை தொடர்ந்து அடுத்தக்கட்டமாக, புதுமண தம்பதிகளுக்கு 30 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்படும் என அந்நாட்டு மாகாணங்கள் சில அறிவித்துள்ளன.

இதற்கு முன்னர் மூன்று நாட்கள் குறைந்தபட்ச ஊதியத்துடன் விடுமுறை என்று இருந்த திட்டத்தில் இருந்து விலகி இந்த புதிய திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.

இச்செய்தி கம்யூனிஸ்ட் கட்சியின் பீப்பிள்ஸ் டெய்லி ஹெல்த் பத்திரிகை அறிக்கையில் வெளியானதாக ராய்ட்டர்ஸ் செய்தி தளம் மேற்கோள் காட்டியுள்ளது

சீனாவின் வடமேற்கு மாகாணமான கன்சு மற்றும் சாஞ்சி ஆகிய மாகாணங்களில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஷாங்காய் மாகாணத்தில் இந்த விடுப்பு பத்து நாட்களாகவும், சிசுவானில் இன்னும் மூன்று நாட்களாக தான் இருக்கிறது என பீப்பிள்ஸ் டெய்லி ஹெல்த் பத்திரிகை கூறுகிறது

”இந்த திருமண விடுமுறையை நீட்டிப்பது, பிறப்பு விகிதத்தை அதிகரிக்க பயனுள்ள முயற்சியாகும்” என சோசியல் டெவலப்மெண்ட் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட்டின் டீன் யாங் ஹாயாங் தெரிவித்திருக்கிறார்.

மற்ற நகரங்கள், மாகாணங்களை ஒப்பிட்டு பார்க்கையில், மந்தமான பொருளாதார வளர்ச்சியுள்ள இடங்களில் தான் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் தளம் கூறியுள்ளது.

இதை தவிர இன்னும் சில திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என யாங் கூறியுள்ளார். இதில் ஆண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறை, வீட்டு மானியங்கள் ஆகியவை அடங்கும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?