சில நாட்களுக்கு முன்பு சமுக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலானது. அந்த வீடியோவில் ஒரு கார், பைகில் சென்ற இருவரை ஏற்றுவது போன்ற காட்சிகள் இருந்தது.
இந்த வீடியோவை முன்னிட்டு, ”பிரேசில் அரசு கார்களை கடத்த முயற்சிப்பவர்களை மக்களே கொல்லலாம் என அறிவித்தது” என்ற தலைப்புடன் பலர் இதைப் பகிர்ந்து வந்தனர். இந்த செய்தி நெட்டிசன்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியது.
Suara.Com என்ற இந்தோனேசிய தளத்தின் தகவல்களின் படி, இந்த வீடியோ கடந்த ஏப்ரல் மாதம் எடுக்கப்பட்டது.
இதில் கார் ஏற்றப்பட்டு காயப்பட்டு விழும் இருவரும் உண்மையில் திருடர்கள் தான் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோ @DeniPetron என்ற டிவிட்டர் பக்கத்தின் மூலம் முதன் முதலாக பகிரப்பட்டிருக்கிறது.
இதில் இரண்டு கடத்தல்காரர்கள் காரை நிறுத்த முயற்சிக்கும் போது கார் அவர்களை ஏற்றி காயப்படுத்துகிறது.
இது அந்த நாட்டில் நடந்த சில குற்றசம்பவங்களின் வீடியோ தான். இது பிரேசில் அரசாங்கத்துடன் தொடர்புடையது அல்ல. மற்றும் அந்நாட்டு அரசு, கொள்ளையர்களை கொல்வது குறித்தும் எந்த சட்டங்களையும் பிறப்பிக்கவில்லை.
எனினும், பிரேசிலில் அதிகரித்துவரும் கார் கொள்ளைகள் வருந்தத்தக்க ஒன்று தான்!
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust