ChatGPT யை பயன்படுத்தி வழக்குக்கு தீர்ப்பளித்த நீதிபதி - எங்கே? twitter
உலகம்

ChatGPT யை பயன்படுத்தி வழக்குக்கு தீர்ப்பளித்த நீதிபதி - எங்கே?

நீதிபதி ஜுவான் மேனுவேல் படில்லா என்பவர் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைக்கு காப்பீட்டு நிறுவனம் காப்பீட்டு தொகையை வழங்க மறுத்த வழக்கை விசாரித்தார்.

Keerthanaa R

சாட் ஜிபிடி என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வழக்கு ஒன்றிற்கு தீர்ப்பளித்துள்ளார் கொலம்பிய நீதிபதி ஒருவர்.

சாட் ஜெனரேட்டிவ் ப்ரீ டிரெயிண்ட் டிரான்ஸ்ஃபார்மர் என்பதே சாட் ஜிபிடியின் விரிவாக்கமாகும். நாம் கொடுக்கும் உள்ளீட்டைப் புரிந்து கொண்டு, இயற்கையான மொழியில் சொற்களைக் கோர்த்து விடை கொடுக்கும் ஒரு செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் தான் இந்த ஜி பி டி.

சமீபகாலமாக மக்களின் பேச்சுக்களில் அதிகமாக அடிபடும் இந்த தொழில்நுட்பம் தான் வருங்காலத்தை ஆளும் என்றும் கூறப்படுகிறது.

கடந்த நவம்பர் முதல் பயன்பாட்டிற்கு வந்துவிட்ட இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வழக்கு ஒன்றிற்கு தீர்ப்பளித்திருக்கிறார் கொலம்பியாவை சேர்ந்த நீதிபதி.

நீதிபதி ஜுவான் மேனுவேல் படில்லா என்பவர், ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைக்கு காப்பீட்டு நிறுவனம் காப்பீட்டு தொகையை வழங்க மறுத்த வழக்கை விசாரித்தார்.

இதற்கான தீர்ப்பை சாட் ஜிபிடி தொழில்நுட்பத்தின் உதவியோடு அவர் வழங்கியிருக்கிறார். சட்ட ரீதியான சில தகவல்களை சரிப்பார்க்க சாட் ஜிபிடியிடம் வழக்கு தொடர்பான கேள்விகளை அவர் எழுப்பியதாக அவர் தெரிவித்தார்.

அதற்கு அந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சில பதில்களை அளித்ததாகவும் தனது தீர்ப்பில் நீதிபதி ஜுவான் குறிப்பிட்டிருந்தார்

சிறுவனுக்கு சாதகமாக தீர்ப்பளித்துள்ளார் நீதிபதி ஜுவான்.

“ஆட்டிசம் உள்ள மைனர் குழந்தைகள் தெரப்பிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்குகள் இருக்கின்றனவா? இதற்கு முன் நீதிமன்றங்கள் இதுபோன்ற வழக்குகளை கையாண்டதுண்டா?என்ன தீர்ப்பளிக்கப்பட்டது?” போன்ற கேள்விகள் அந்த ஏஐயிடம் கேட்கப்பட்டது.

இதற்கு அந்த தொழில்நுட்பம் அளித்த பதில்கள், வழக்கை விசாரித்த பிறகு அவருக்கு எட்டிய முடிவு இரண்டையும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார். இரண்டையும் ஒரு சேர ஆலோசித்து சிறுவனுக்கு சாதமாக அவர் தீர்ப்பை வழங்கியதாக கூறினார்.

ஏஐ தொழில்நுட்பங்களை பயன்படுத்த கொலம்பிய சட்டம் மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை என்றாலும், சாட் ஜிபிடி போன்ற தொழில்நுட்பங்கள் ஒரு சார்பாகவோ, அல்லது சமயத்தில் தவறாகவோ பதிலளிக்கலாம் என்பதனால், நீதிபதியின் இந்த முடிவு எதிர்மறை விமர்சனங்களை அதிகமாக பெற்று வருகிறது.

ஆனால் அந்த நீதிபதியோ, தொழில்நுட்பத்தின் உதவியை பெறுவதால் நான் எனது கடமையிலிருந்து தவறிவிடமாட்டேன் என்று வாதிடுகிறார். மேலும், வரும் நாட்களில் சக நீதிபதிகளும் இந்த முறையை பயன்படுத்தலாம் எனத் தெரிவித்திருக்கிறார்.

மனிதர்கள் அல்லாது, இதுபோன்று தொழில்நுட்பங்கள் தீர்ப்பளிக்கத் தொடங்கினால் என்னவாகும்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?