வெனிசுலா நாட்டில் ஆணுறை பாக்கெட்டின் விலை ரூ 60,000 Pexels
உலகம்

வெனிசுலா நாட்டில் ஆணுறை பாக்கெட்டின் விலை ரூ 60,000 - இது உண்மையா?

NewsSense Editorial Team

மக்கள்தொகை அதிகரிப்பைக் கட்டுப்படுத்தவும், பாலியல் நோய் பரவலைத் தடுக்கவும் ஆணுறைகள் இலவசமாகவோ, மிகக் குறைந்த விலையிலோ விநியோகிப்பதைத் தான் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் இது போன்ற நிலை இல்லை. இந்த அத்தியாவசியப் பொருளுக்கு சில நாடுகளில் அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். குறிப்பாக வெனிசுலாவில் , 30ஆணுறைகளை கொண்ட ஒரு பாக்கெட் சுமார் ரூ.60,000-க்கு விற்கப்பட்டு இருக்கிறது.

இப்படி ஒரு தகவல் ஊடகங்களில் கடந்த இரண்டு நாட்களாக பரவி வருகிறது? இது உண்மையா?

ஆம். பகுதி உண்மை. இது 2015 ஆம் ஆண்டு விலை நிலவரம்.

இது தொடர்பாக ஒரு கட்டுரை டைம் இதழில் வந்துள்ளது.

60000 ரூபாய்க்கு விற்கப்பட்ட காண்டம்கள்

இங்கு கவனிக்க வேண்டிய தனிச்சிறப்பு என்னவென்றால், உலகில் பல புகழ்பெற்ற மற்றும் விலையுயர்ந்த ஆணுறை பிராண்டுகள் இருந்தாலும், இவ்வளவு விலையுயர்ந்த ஆணுறை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள் என்பது தான்.

இது மட்டுமின்றி, வெனிசுலாவிலும் கருக்கலைப்பு தடைசெய்யப்பட்டுள்ளது. சட்டத்திற்குப் புறம்பாக கருக்கலைப்பில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது. ஐ.நா.வின் உலக மக்கள்தொகை அறிக்கை 2015-ன் படி, வெனிசுலாவில் அதிக எண்ணிக்கையிலான பதின்ம வயது கர்ப்ப வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது.

ஏன் விலை அதிகம்?

கருகலைப்பு தொடர்பான கடுமையான சட்டங்கள் இங்கு இருப்பதே இதற்கு காரணம் என்கிறார்கள் சமூக பார்வையாளர்கள்.அதுமட்டுமல்ல, 2015ஆம் ஆண்டு சமயத்தில் வெனிசுலாவில் பொருளாதார நிலைமை மிக மோசமாக இருந்தது, அந்த நாட்டின் பொருளாதார அச்சாணியாக இருந்த கச்சா எண்ணெய் விலை கீழே விழுந்து கிடந்தது. இதன் காரணமாகவே அந்த சமயத்தில் ஆணுறை விலை உச்சத்தில் இருந்திருக்கிறது.

இப்போது விலை என்ன?

இப்போது விலை குறைந்துவிட்டதா என்றால்? இல்லை என்பதே பதில் 36 காண்டம்கள் கொண்ட ஓர் ஆணுறை பாக்கெட்டின் விலை வெனிசுலாவில் தோராயமாக ரூ 4000.

ஒரு கருத்தடை மாத்திரையின் விலை ரூ 700.

ஐ.நா ஆய்வின் படி, பதின்பருவத்தின் கர்ப்பமாவது வெனிசுலாவில் அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?