அதிபர் மாக்ரோன் ட்விட்டர்
உலகம்

இளைஞர்களுக்கு இலவச ஆணுறை வழங்கும் பிரஞ்சு அரசு: எப்போது அமலுக்கு வருகிறது புதிய சட்டம்?

நாட்டில், எஸ்டிடி எனப்படும் Sexually Transmitted Diseases கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் 30 சதவிகிதம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டினார் அதிபர் மாக்ரோன்

Keerthanaa R

18 வயது முதல் 25 வயது வரை உள்ள இளைஞர்களுக்கு இலவசமாக ஆணுறை வழங்கப்படும் என பிரான்ஸ் நாட்டு அதிபர் இம்மானுவல் மாக்ரோன் அறிவித்துள்ளார்.

தேவையற்ற கர்ப்பங்களை தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என அதிபர் மாக்ரோன் தெரிவித்தார்.

ஃபான்டைன் லே காம்டே என்ற சுகாதார நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்த பிரான்ஸ் நாட்டு அதிபர் மாக்ரோன், கருத்தடைக்கு பதிலான ஒரு சிறிய புரட்சி இது எனவும் தெரிவித்திருந்தார்.

இது குறித்து பேசிய அதிபர் மாக்ரோன், பாலியல் கல்வி என்பது எதார்த்தத்திலும், புத்தகங்களிலும் வேறுபட்டதாகவே உள்ளது. இதனால், கற்பிப்பவர்களுக்கே இன்னும் சிறந்த, முறையான கல்வி அவசியமாக இருக்கிறது என்றார்

2023ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் உள்ள மருந்தகங்களில் 18-25 வயதினர் ஆணுறைகளை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

நாட்டில், எஸ் டி டி எனப்படும் Sexually Transmitted Diseases கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் 30 சதவிகிதம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டிய மாக்ரோன், அதனை கட்டுப்படுத்தும் முயற்சியாகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.

இந்த வருடத்தின் தொடக்கத்தில் 25 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு பிரஞ்சு அரசு இலவசமாக கருத்தடை மாத்திரைகள் வழங்க தொடங்கியது. பெண்கள் நிதி சிக்கல்கள் காரணமாக கருத்தடையை கைவிடக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஏஎஃப்பி செய்தி தளம் கூறுகிறது.

மேலும், எய்ட்ஸ் மற்றும் எஸ்டிடி நோய்களை தடுக்க, மருத்துவர் பரிந்துரை இருந்தால், நாட்டின் சுகாதார அமைப்பு இலவச ஆணுறையை பரிதுரைக்கப்பட்டவர்களுக்கு வழங்கும் திட்டம் ஏற்கனவே அமலில் உள்ளது.

இதை தவிர, கொரோனா தொற்றை தவிர்க்கவும், மற்ற பாதிப்புகளிலிருந்து தப்பிக்கவும் சுகாதார துறை அறிவுறுத்தும் வழிமுறைகளை கடைப்பிடிக்குமாறு அதிபர் கேட்டுக்கொண்டார்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?