Jenn-Cory Twitter
உலகம்

11 கோடிக்கு வாங்கப்பட்ட பேய் வீடு - என்ன காரணம் தெரியுமா?

Keerthanaa R

நாம் பல நேரங்களில் நம் வீட்டில் தனியாக இருக்கவே பயப்படுவோம். அதிலும், இரவில் தண்ணீர் குடிக்க எழுந்து செல்லவேண்டும் என்றால், உலகில் உள்ள அத்தனை பேய்களும் நம் வீட்டில் தான் இருக்கும் என்ற எண்ணம் தோன்றும்!


நாம் இப்படியிருக்க, நிஜமாக அமானுஷ்யங்கள் நிறைந்த ஒரு வீட்டில் ஆட்கள் வாழ்ந்துள்ளனர் என்றால் தைரியம் தான். அப்படி ஒரு மிக ஆபத்தான அமானுஷ்ய வீடுகளில் ஒன்று காஞ்சூரிங் திரைப்படத்தில் வந்த வீடு. இந்த வீடு நிஜம் தான் என்ற செய்திகள் நம் அனைவருக்கும் தெரிந்ததே. அந்த வீட்டில் ஆட்கள் வாழ்ந்தும் வந்தனர், அவர்களுக்கு நடந்த அமானுஷ்ய அனுபவங்களை வைத்துத் தான் காஞ்சூரிங்கும் படமாக்கப்பட்டது. இந்த வீட்டை 2019ல் அமானுஷ்ய புலனாய்வாவார்களான ஜென்-கோரி தம்பதி 4,39,000 டாலருக்கு வாங்கியிருந்தனர்.

Conjuring House

இரண்டு வருடங்களுக்குப் பிறகு, 2021ல் நடந்த ஒரு திரில்லிங் அனுபவத்திற்குப் பிறகு இதை விற்பதாக அந்த தம்பதி விளம்பரம் கொடுத்திருந்தனர். அந்த வீட்டை இப்போது 1.5 மில்லியன் டாலர்களுக்கு விற்கவுள்ளனர். சுமார் 286 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட இந்த வீடு 3100 சதுரடியில், அமெரிக்காவின் ரோட் தீவில் அமைந்துள்ளது. பாஸ்டனை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபரான ஜாக்குலின் நுனேஸ் என்பவர் தான் இந்த பேய் வீட்டின் புதிய உரிமையாளர்.


இந்த வீட்டிற்கு நிரந்தரமான ஒரு உரிமையாளர் இதுவரை இருந்ததில்லை. வீட்டை வாங்குபவர்கள் எல்லாம், ஏதாவது ஒரு கட்டத்தில், ஒரு அமானுஷ்ய அனுபவத்தைப் பெற்றிருப்பார்கள். இதற்கு முன் 1971 முதல் 1980 வரை அங்கு வாழ்ந்த ஆண்ட்ரியா பெரான் தன் தாய்யை நாற்காலியோடு சேர்த்து ஏதோ ஒன்று காற்றில் 20 அடிக்குத் தூக்கி வீசியதை கண்ணார பார்த்ததாக சொன்னார். இன்னொரு முறை பெரான் வீட்டிற்கு புலனாய்வாளர் வந்திருந்த போது வீட்டிலிருந்தவர்களில் ஒருவரை கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒன்று கன்னத்தில் சரமாரியாக அறைந்ததாகக் குறிப்பிட்டார்.

Conjuring

இவ்வளவு ஆபத்துகள் இருக்கும் இந்த வீட்டை வாங்க நேர்காணல் நடத்தி அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் ஜாக்குலின் நுனேஸ். காஞ்சூரிங் வீட்டை வாங்குபவர்கள் அங்குத் தங்கக் கூடாது என்பது விதிமுறையாகக் குறிப்பிடப்பட்டது. இந்த வீட்டை ஒப்படைக்கப் போகும் அறிவிப்பை ஃபேஸ்புக் லைவில் பகிர்ந்தனர் ஜென்-கோரி.

இந்த வீட்டில் இவர்கள் தங்கியிருந்த போது ஏற்பட்ட அனுபவத்தை "தி ஸ்லீப்லெசஸ் அன்ரெஸ்ட் என்ற தலைப்பில், ஒரு ஆவணப்படமாக இவர்கள் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?