ஒரு விமான விபத்தில் தப்பித்த பிறகான மனநிலை என்பது நமக்கு என்னவாக இருக்கும்? நிச்சயமாக பயந்திருப்போம். கை, கால் ஓடவில்லை என்ற நிலையில் எங்கையாவது காயம் ஏற்பட்டிருக்கிறதா என்ற நடுக்கத்துடன் பார்த்துக்கொண்டிருக்கலாம்.
சிலர் உடனடியாக அன்புக்குரிய யாருக்காவது கால் செய்து நடந்ததைக் கூறுவர். அவசர அழைப்புகளை மேற்கொள்வர். ஆனால் இதில் எதுவுமே இல்லாமல் வினோதமான காரியத்தைச் செய்து கவனம் பெற்றுள்ளனர் இந்த தம்பதி.
பெரு நாட்டில் உள்ள ஜார்ஜ் சாவேஸ் விமான நிலையத்தில் புறப்படத் தயாராக இருந்த விமானம் ரன்வேயில் உள்ள தீயணைப்பு வாகனத்தில் மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் தப்பித்த தம்பதி உடைந்து நொருங்கிய நிலையில் இருந்த விமானத்தின் முன் நின்று செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.
இந்த செல்ஃபி இணையத்தில் படு வைரலானது. நெட்டிசன்கள் இதற்கு பாசிடிவாகவும் நெகட்டிவாகவும் கமன்ட் செய்து வருகின்றனர்.
இந்த விபத்தில் ரன்வேயில் இருந்த ஏஞ்சல் டோரஸ், நிக்கோலஸ் சான்டா காடியா ஆகிய இரு தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்துள்ளனர். நல்லவேளையாக விமானத்தில் இருந்த பயணிகளுக்கோ பணியாளர்களுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. சிலருக்கு மட்டும் சிறிய காயங்கள் ஏற்பட்டிருக்கிறது.
என்ரிக் வர்சி - ரஸ்பிக்லியோசி தம்பதியினருக்கு இதில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அவர்கள் எடுத்த செல்ஃபியை "வாழ்க்கை உங்களுக்கு இரண்டாவது வாய்ப்பைத் தரும் போது #Latam:" என்று தலைப்பிட்டு பதிவிட்டுள்ளனர்.
பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் இந்த புகைப்படம் வைரலாக பகிரப்பட்டது. இதனை சிலர் நகைச்சுவையாக பகிர்ந்தாலும் பலர், "இந்த புகைப்படம் எடுக்கப்பட்ட தருணத்தில் அங்கிருந்த மனிதர்கள் உயிர்களை பறிகொடுத்தைப் பற்றி இந்த தம்பதி சிந்தித்திருக்க வேண்டும் எனக் கூறிவருகின்றனர்."
இணையத்தில் மிகப் பிரபலமான டிசாஸ்டர் கேர்ள் புகைப்படத்தை காப்பி அடிக்க இப்படி செய்துள்ளதாகவும் சில நெட்டிசன்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust