FBI : Top 10 குற்றவாளிகளில் இருக்கும் ஒரே பெண் - 'கிரிப்டோ ராணி'-யின் கதை என்ன? Ruja Ignatova
உலகம்

FBI : Top 10 குற்றவாளிகளில் இருக்கும் ஒரே பெண் - 'கிரிப்டோ ராணி'-யின் கதை என்ன?

Ruja Ignatova எனப்படும் அந்த பெண் வரலாற்றிலேயே மிகப் பெரிய கிரிப்டோ மோசடியை நிகழ்த்தியதாக நம்பப்படுகிறது. கொலைகாரர்கள், கொடூர கும்பல்களின் தலைவர்கள் இருக்கும் அந்த பட்டியலில் ஒரே ஒரு பெண் இவர் தான்.

Antony Ajay R

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நிறுவனமான எஃப்.பி.ஐ நிறுவனத்தின் டாப் 10 குற்றவாளிகளின் பட்டியலில் ஒரு பெண் இடம் பிடித்துள்ளார்.

கொலைகாரர்கள், கொடூர கும்பல்களின் தலைவர்கள் இருக்கும் அந்த பட்டியலில் ஒரே ஒரு பெண் இவர் தான்.

எஃப்.பி.ஐ-யில் 1950 முதல் 529 தேடப்படும் குற்றவாளிகள் இடம்பிடித்துள்ளனர். இதில் 11 பேர் மட்டுமே பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கிரிப்டோகுயின் என்று அழைக்கப்படும் இவர், உலகிலேயே மிகப் பெரிய கிரிப்டோகரன்சி மோசடியை நிகழ்த்தியவராக கருதப்படுகிறார்.

இவற்றையும் வாசியுங்கள்

ரஷ்யா: புதினுடன் புகைப்படங்களில் மீண்டும் மீண்டும் தோன்றும் இந்த பெண் யார்? இணையம் கேள்வி

10 ஆயிரம் பேரின் கொலைக்கு காரணமான 97 வயது பெண் - அதிர்ச்சி தகவல்

சிங் ஷி : ஒரு பாலியல் தொழிலாளி உலகை உலுக்கிய கடற்கொள்ளையர் ஆன கதை - ஒரு விறுவிறு வரலாறு

இவர் உலகம் முழுவதும் இருந்து முதலீட்டாளர்களிடம் 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மோசடி செய்துள்ளார். இன்றைய இந்திய மதிப்பில் 32 ஆயிரம் கோடி.

2014ம் ஆண்டு ருஜு One Coin என்ற கிரிப்டோகரன்சி நிறுவனத்தை நிறுவி இந்த மோசடியைச் செய்துள்ளார்.

2016ம் ஆண்டு சந்தையில் கிரிப்டோ கரன்சி என்ற சொல் மிகவும் பிரபலமாக இருந்தது. அந்த நேரத்தில் ஒன்காயின் பிட்காயினை விட லாபமானது எனக் கூறி பணம் சம்பாதிக்கத் துடித்த முதலீட்டார்களை ஈர்த்தார்.

"இரண்டு ஆண்டுகள் கழித்து யாருமே பிட்காயின் குறித்துப் பேசமாட்டார்கள்" என முழங்கினார். முதலீட்டாளர்கள் அவளது வார்த்தையை வேத வாக்காக நம்பினர்.

ஆனால் ஒன்றரை வருடம் கழித்து, அக்டோபர் 2017ல் பல்கேரியா நாட்டில் உள்ள சோஃபியா என்ற ஊரில் இருந்து விமானத்தில் பறந்தவரை யாருமே அதன்பிறகு பார்க்கவில்லை.

ருஜு முறைகேட்டில் ஈடுபடுவது தெரிந்து, அவரைக் கைது செய்வதற்கு அமெரிக்க அதிகாரிகள் தயாராக இருந்த நேரத்தில் அவர் தப்பித்திருக்கிறார்.

அதன்பின்னர் ஏதேன்ஸ், கிறீஸ், ஐக்கிய அரபு நாடுகள், ஜெர்மனி, ரஷ்யா போன்ற நாடுகளுக்கு அவரது ஜெர்மனி பாஸ்போர்டை பயன்படுத்தி சென்றிருப்பார் என்று எஃப்.பி,ஐ அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சர்வதேச அளவில் நடைபெற்ற மிகப் பெரிய முறைகேடாக ருஜு செய்த முறைகேட்டை குறிப்பிடுகின்றனர்.

அதில் 100க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 30 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலபேருக்கு கிரிப்டோ கரன்சி பற்றிய சரியான புரிதல் கிடையாது. பலர் முதலீடு செய்யவே தெரியாதவர்களாக இருந்துள்ளனர்.

ருஜு இக்னடோவா ஜெர்மனியைச் செர்ந்த பெண். அவர் வளர்ந்தது பல்கேரியாவில். இவர் ஆக்ஸ்போர்ட் நிறுவனத்தில் சட்டம் பயின்றிருப்பதாக கூறப்படுகிறது.

2017ம் ஆண்டு முதல் இவரை தீவிரமாக எஃப்.பி.ஐ தேடி வருகிறது. இவர் எப்போதும் ஆயுதம் ஏந்திய காவலர்களின் துணையுடன் இருக்கலாம் என எஃப்.பி.ஐ கூறியிருக்கிறது. மேலும், இவர் முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து மாற்றியிருக்கவும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?