Dead Sea Canva
உலகம்

Dead Sea: என்ன இந்த கடலில் நாம் மிதக்கலாமா? உலகின் தாழ்வான நீர்நிலை பற்றி ஆச்சரிய தகவல்கள்

இந்த நீரில் மெக்னீசியம், ப்ரோமைன், பொட்டாசியம் உள்ளிட்ட 21 வகையான தாதுக்கள் இருக்கின்றன. அவற்றில் 12 மினரல்கள், உலகிலுள்ள மற்ற நீர்நிலைகளில் கடல்களில் இருக்காது.

Keerthanaa R

ஜார்டனுக்கும் இஸ்ரேலுக்கும் நடுவில் அமைந்திருக்கிறது டெட் சீ. இது ஒரு உப்பு நீர் நிறைந்துள்ள ஏரி.

கொஞ்சம் அமானுஷ்யமாக “Dead Sea" என்ற பெயரைக் கொண்டிருந்தாலும், உலகளவில் இருந்து சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது இந்த நீர்நிலை.

ஜார்டன் நதியிலிருந்து டெட் சீக்கு அதிக நீர்வரத்து இருக்கிறது. மேலும் கிழக்கு பகுதியிலிருந்து பல சிறிய நீரோடைகளிலிருந்தும் இந்த ஏரியில் நீர் கலக்கிறது.

டெட் சீயில் தண்ணீர் உள்ளே வர மட்டும் தான் வழிவகை இருக்கிறது. எனில் இந்த ஏரியில் இருக்கும் தண்ணீர் எப்படி வெளியேறுகிறது? இதனை “Dead Sea" என்றழைக்க காரணமென்ன?

இந்த டெட் சீயை மற பெயர்களாலும் அழைக்கின்றனர். சீ ஆஃப் சோடோம், சால்ட் சீ, ஈஸ்டர்ன் சீ ஆகிய பெயர்களில்.

காரணம் இந்த நீர்நிலையில், வழக்கமாக கடல்களில் இருக்கும் உப்பின் அளவை விட அதிக உப்பு இருக்கிறது, கிட்ட தட்ட இங்கு 30 முதல் 40 சதவிகிதம் உப்பு கலந்திருக்கிறது.

அதிக உப்பு இருப்பதன் காரணமாக தாவரங்கள், பெரிய நீர்வாழ் உயிரனங்களான மீன், சுறாக்கள், திமிங்கலங்கள் இங்கு இல்லை. மாறாக நுண்ணுயிர்களான பூஞ்சை பாக்டீரியாக்கள் இங்கு இருக்கின்றன.

வழக்கமாக நீரில் காணப்படும் உயிரனங்கள் இங்கு இல்லாத காரணத்தினாலேயே இதனை டெட் சீ என்று அழைக்கின்றனர்

ஏரிக்கு நீர் வெளியேறும் வழி இல்லை, மேலும் புதிய நீரின் அதிக வரவு ஆவியாதல் மூலம் மட்டுமே இங்கிருக்கும் தண்ணீர் வெளியேறுகிறது.

சவக்கடல் பூமியின் மிகக் தாழ்ந்த புள்ளியாகும், இது கடல் மட்டத்திலிருந்து 1,320 அடிக்கு கீழே உள்ளது

இந்த நீரில் மெக்னீசியம், ப்ரோமைன், பொட்டாசியம் உள்ளிட்ட 21 வகையான தாதுக்கள் இருக்கின்றன. அவற்றில் 12 மினரல்கள், உலகிலுள்ள மற்ற நீர்நிலைகளில் கடல்களில் இருக்காது.

இந்த மினரல்கள் நம் உடலை ரிலாக்ஸ் ஆக்க உதவுகிறது மேலும், சருமத்திற்கு பொலிவு தந்து, சுற்றோட்ட அமைப்புகளை சீரமைக்க உதவுகின்றன. மேலும், இதன் அதிக உப்புத்தன்மையின் காரணமாக நம்மை நீரில் மிதக்க வைக்கிறது

பைபிள்களின் கூற்றுப்படி, இந்த டெட் சீ மன்னர் டேவிடின் புகலிடமாக விளங்கியது. மேலும் இதுவே உலகின் முதல் சுகாதார ஓய்வு விடுதியாகும்.

எகிப்தின் மம்மிக்களை பாதுகாக்க உதவும் பல்வேறு வகையான தாதுக்களை இந்த டெட் சீ வழங்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

ஆனால் என்ன தான் இந்த நீர்நிலையில் நம்மால் மிதக்க முடியும் நீராட முடியும் என்றாலும், அதிக உப்பு நம் உடலில் படுவது சிறுநீரகம் மற்றும் இருதய கோளாறுகள் ஏற்படலாம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?