காலண்டர் Twitter
உலகம்

எத்தியோப்பியா : இந்த நாட்டில் இப்போது தான் 2015 ஆம் ஆண்டு ஆகிறது - ஏன் தெரியுமா?

NewsSense Editorial Team

நம் வாழ்வில் பல தருணங்களில், காலத்தைக் கடந்து செல்ல விரும்பி இருப்போம். அது சில நேரங்களில் முன்னோக்கி அல்லது பின்னோக்கி இருக்கலாம்.

நமக்கு பிடித்தமானவர்களைச் சந்திக்கச் செய்யும் ஒவ்வொரு நிமிட பயண நேரமும் நம்மை ஆண்டுக் கணக்கில் அழுத்துவதாக இருக்கும். அதை சடுதியில் கடக்க விரும்புவோம்.

ச்சே திரும்ப காலேஜ் லைஃப் கிடைச்சா, இன்னும் நல்லபடியா என்னோடு லைஃப மாத்திப்பேன். இன்னும் பெரிய உயரங்கள லட்டு மாதிரி தொடுவேன் எனக் கடந்த காலத்தை மாற்ற நினைப்போம்.


சரி, காலப் பயணம் இப்போதைக்கு கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஆராய்ச்சி நிலையிலேயே இருக்கிறது.

ஆனால் ஒரு நாடு காலத்தில் எப்போதும் பின்தங்கியே இருக்கிறது. அந்த நாட்டின் பெயர் எத்தியோப்பியா.

வழக்கமாக உலகம் ஓடும் காலத்தை விட, இவர்கள் 7 ஆண்டு காலம் பின்னே இருக்கிறார்கள். பல நாட்டில், பல தரப்பட்ட கலாச்சாரம், பல்வேறு பழக்க வழக்கங்கள் இருக்கும். பலரும் தங்களுக்குத் தோதான நாட்காட்டும் (காலெண்டர்) முறையைப் பின்பற்றி வருவர்.

எத்தியோப்பியா

ஏன், நம் தமிழ்நாட்டில் கூட தமிழ் வருட முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறதே.

ஆனால் உலக அளவில் பொதுவாகக் கணக்கு வழக்கு நிதி போன்றவற்றுக்கு மேற்கத்திய கிரிகோரியன் காலண்டர் முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் எத்தியோப்பியாவில் 13 மாதங்கள் கொண்ட ஒரு வித்தியாசமான காலண்டர் முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

12 மாதங்களில் 30 நாட்களும், 13ஆவது மாதத்தில் 5 அல்லது 6 நாட்களும் இருக்கும். ரோம தேவாயலம் இந்த காலெண்டர் முறையை கிபி 525ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தியது. எத்தியோப்பியபர்கள் அதே காலண்டர் முறையைப் பின்பற்றி வருகிறார்கள்.

இதில் ஒரு சுவாரசிய விஷயம் என்னவென்றால், உலகம் 1999ஆம் ஆண்டு நள்ளிரவு 11:59:59 மணிக்கே 21ஆம் நூற்றாண்டை வரவேற்றுவிட்டது. ஆனால் எத்தியோப்பியர்கள் 11 செப்டம்பர் 2007-ல் தான் கொண்டாடினர். இன்று நாம் 2022ஆம் ஆண்டில் இருக்கிறோம். அவர்கள் 2015ஆம் ஆண்டில் இருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த ஆப்பிரிக்க கண்டத்திலேயே நல்ல மண் வளம் கொண்ட நாடு எத்தியோப்பியா. அதே போல இந்த நாட்டில் பல அரிதான வன உயிரினங்களும் காணலாம். இன்று நான்று சபாஷ் கூறி ஊதி ஊதிக் குடிக்கும் காபி இங்குத் தோன்றி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆப்பிரிக்க நாடுகளிலேயே காலனி ஆதிக்கத்தின் கீழ் போகாத நாடும் எத்தியோப்பியா மட்டுமே.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?