இந்தோனேசிய ரூபாய் நோட்டில் இந்துக் கடவுளின் முகம் - பாதுகாப்பு அம்சமாக பயன்படுத்தப்பட்டதா? twitter
உலகம்

இந்தோனேசிய ரூபாய் நோட்டில் இந்துக் கடவுளின் முகம் - பாதுகாப்பு அம்சமாக பயன்படுத்தப்பட்டதா?

Keerthanaa R

இந்திய கலாச்சாரமும், அதனை சார்ந்த மத, கடவுள் வழிபாடுகளும், இந்தியா மட்டுமல்லாது பல நாடுகளின் கலாச்சாரத்தில் நாம் பார்த்திருக்கிறோம்.

அப்படி தான் இந்தோனேசியா அவர்களது ருப்பியா ( ரூபாய் ) நோட்டுகளில் விநாயகரின் படம் சேர்க்கப்பட்டதும்.

இந்த நோட்டுகள் தற்போது புழக்கத்தில் இல்லை என்றாலும், விநாயகரின் உருவத்தை தங்கள் நாட்டின் ரூபாய் நோட்டில் பயன்படுத்தியது இந்தோனேசியா மட்டுமே.

1998 ஆம் ஆண்டு இந்தோனேசியா அரசு 20,000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தியது. அதில் வலது புறத்தில் அவர்கள் நாட்டின் கல்வித்துறை அமைச்சரும், கல்வியின் முக்கியத்துவத்தை நாட்டின் மக்களுக்கு எடுத்துரைத்தவரும் ஆன கி ஹட்ஜர் தேவந்தாரா என்பவரின் புகைப்படம் அச்சடிக்கப்பட்டிருக்கும்.

அதனுடன் இடதுபுறத்தில் விநாயகரின் புகைப்படம் இருக்கும். இந்த விநாயகரின் சின்னமானது, அந்த ரூபாய் நோட்டுகளின் பாதுகாப்பு அம்சமாகவும் இருந்தது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ரூபாய் நோட்டுகள் 10 ஆண்டுகாலம் அந்த நாட்டில் புழக்கத்தில் இருந்தது. அதன் பின்னர் டிசம்பர் 2008ல் பணமதிப்பிழப்பு செய்யப்பட்டதில், இந்த 20,000 இந்தோனேசிய ரூபாய் நோட்டும் தடை செய்யப்பட்டது.

அத்துடன் சேர்த்து, இந்தோனேசிய ரூபாய் 10,000 நோட்டுகளும், 1999 ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட 50 ஆயிரம் மற்றும் ஒரு லட்சம் இந்தோனேசிய ரூபாய் நோட்டுகளும் மதிப்பிழந்தன.

இந்தோனேசிய அரசு அதிகாரப்பூர்வமாக ஆறு மதங்களை அங்கீகரித்துள்ளது.

இஸ்லாம், புராட்டஸ்டன்டிசம், ரோமன் கத்தோலிக்கம், இந்து மதம், பௌத்தம் மற்றும் கன்பூசியனிசம் அடங்கும். இவற்றில், மக்கள் தொகையில் 1.7 சதவீதம் பேர் மட்டுமே இந்துக்கள்.

வரலாற்றின் படி, இந்தோனேசியாவின் சில பகுதிகள் சோழ மன்னர்கள் ஆட்சியின் கீழ் இருந்தது

அப்போது அங்கு பல கோயில்கள் கட்டப்பட்டன. ஞானம், கலை மற்றும் அறிவியலின் கடவுளாக போற்றப்பட்ட விநாயகப் பெருமானின் நிலை அவரை கரன்சி நோட்டில் இடம்பெற்றதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

கடந்த ஆண்டு இந்த இந்தோனேசிய ரூபாய் நோட்டினை மேற்கோள்காட்டி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பாஜக அரசிடம் கோரிக்கை ஒன்றினை வைத்திருந்தார்.

அதில் அவர் கூறியதாவது, “இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருக்கும் இந்தோனேசிய நாட்டின் ரூபாய் நோட்டுகளில் விநாயகரின் படம் பயன்படுத்தப்பட்டது. இந்தோனேசியாவால் இதை செய்ய முடிகிறது என்றால் நாமும் செய்யக்கூடும். நான் நாளையே மத்திய அரசுக்கு கடிதம் அனுப்புகிறேன்

நமது இந்திய ரூபாய் நோட்டுகளில் ஒரு பக்கம் விநாயகரையும், மறுபக்கம் லக்ஷ்மி தேவியையும் சேர்த்துக்கொண்டால், நாட்டின் பொருளாதாரம் செழிக்கும், மேலும், அனைவருக்கும் அருள் கிடைக்கும்” என்று அவர் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?