Do Foreign Men Get Rs 4.16 Lakh To Marry Women In Iceland? Know The Truth Twitter
உலகம்

ஐஸ்லாந்து பெண்களை திருமணம் செய்ய வெளிநாட்டவருக்கு 4 லட்சம் கொடுக்கப்படுகிறதா? Fact Check

ஆண்கள் எப்படி இந்த ஆஃபரை அடைய வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் தேட ஆரம்பித்தனர். முகநூலில் உள்ள பல ஐஸ்லாந்திய பெண்களுக்கு, பல நாட்டு ஆண்களிடம் இருந்து நட்புக் கோரிக்கைகள் (Friends request) வந்தாகத் தெரிவித்துள்ளனர்.

Priyadharshini R

தற்போது இருக்கும் சூழலில் திருமணத்திற்கு பெண் கிடைப்பது குதிரை கொம்பாக உள்ளது. ஆனால் இந்த நாட்டில் இருக்கும் பெண்களை திருமணம் செய்துக்கொண்டால் ரூ. 4.16 லட்சம் பணம் வழங்குவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.

இந்த தகவல் உண்மையா? எப்படி இந்த தகவல் பரவியது என்பது குறித்து விரிவாக இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்

ஐஸ்லாந்து நாட்டில் ஆண்கள் குறைவாக இருக்கும் காரணத்தினால் அங்குள்ள பெண்களைத் திருமணம் செய்யும் வெளிநாட்டவருக்கு அரசாங்கம் சுமார் 4.16 லட்ச ரூபாய் வழங்குவதாக செய்திகள் வைரலானது.

அதிலும் குறிப்பாக ஆப்பிரிக்க ஆண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் இதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஆண்கள் எப்படி இந்த ஆஃபரை அடைய வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் தேட ஆரம்பித்தனர். இதையடுத்து தான் snopes.com என்ற உண்மைச் சரிபார்ப்பு இணையதளம் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டதில் இந்த தகவல் முற்றிலும் பொய்யானது என்று கண்டறிந்துள்ளனர்.

இந்த செய்தியை முதலில் கடந்த ஜூன் 2016-ல் ஏராளமான ஆப்பிரிக்க இணையதளங்கள் வெளியிட்டன.

இதனையடுத்து, முகநூலில் உள்ள பல ஐஸ்லாந்திய பெண்களுக்கு, பல நாட்டு ஆண்களிடம் இருந்து நட்புக் கோரிக்கைகள் ( Friends request) வந்தாகத் தெரிவித்துள்ளனர்.

அவர்களது இணையதள பக்கத்தில், இது ஒரு பொய்யான தகவல் என்றும் சில ஊடகங்கள் வதந்திகளை பரப்புவதாகவும் உறுதி செய்யப்பட்டது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?