உலகம் முழுக்க இருக்கும் தனித்துவமான காதல் ஜோடிகள் பற்றி தெரியுமா? Twitter
உலகம்

உலகம் முழுக்க இருக்கும் தனித்துவமான காதல் ஜோடிகள் பற்றி தெரியுமா?

”முகங்களையோ உடல் நிறங்களையோ இது பார்க்காதே பார்க்காதே” என்பது போல உலகம் முழுவதும் இருக்கும் சில தனித்துவமான காதல் ஜோடிகளின் கதைகளை பார்க்கலாம்.

NewsSense Editorial Team

என்னதான் 'காதலுக்கு கண்கள் இல்லை', 'மூளை இல்லாதவர்கள் தான் காதலிப்பார்கள்' என்று நகைச்சுவையாக சொல்லக் கேட்டிருந்தாலும் காதலுக்கு பலம் அதிகம் தான்.

இதனை நிரூபித்து சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கும் சில காதல் ஜோடிகளின் கதைகளை பார்க்கலாம்.

உலகின் உயரம் குறைந்த மனிதர் ஆண்டன் கிராஃப்ட். சுமார் 4 அடி 4 அங்குலம் உயரம் கொண்ட இவர் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த திருநங்கை சைனா பெல் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

இதில் ஸ்வாரசியம் என்னவென்றால் திருநங்கை சைனா பெல் 6 அடி 3 அங்குல உயரம் கொண்டவர். இந்த உயர்ந்த காதல் ஜோடியின் கதை நிச்சயம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கும்!

அமெரிக்காவின் நியூ ஜெர்சியைச் சேர்ந்தவர் செர்ஜியோ மிராண்டா. இவரது உயரம் 5 அடி 3 அங்குலம் ஆகும். இவர் தன்னை விட உயரமான மல்யுத்த வீரர் அமேசான் அமண்டா என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

செர்ஜியோ மிராண்டாவை விட அமண்டா இரண்டு மடங்கு அதாவது, 6 அடி 3 அங்குல உயரம் கொண்டவர்.

விசித்திர காதல் பட்டியலில் அடுத்ததாக இடம்பிடித்துள்ளவர்கள் அமெரிக்காவைச் சேர்ந்த கூடைப்பந்து வீரர் சகில் ஓ நில் மற்றும் நிகோல் அலெக்சாண்டர்.

சுமார் 7 அடி உயரம் கொண்ட சகில் ஓ நில்லை விட நிகோல் அலெக்சாண்டர் 2 அடி குறைவாம். இந்த காதல் ஜோடி பின்னாட்களில் பிரேக் அப் செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது.

தற்போது இருக்கும் ட்ரெண்டின் படி, உனக்கு 60 எனக்கு 20 பாணியில் ஒரு காதல் ஜோடி இத்தாலியில் இருந்திருக்கிறது. அதாவது, இத்தாலியைச் சேர்ந்த தொழில் அதிபர் பிளாவியோ என்பவர் அந்நாட்டின் கவர்ச்சி மாடல் அழகியான எலிசபெத் கிரிகொராசி என்பவரை மணமுடித்துள்ளார். இவர்கள் இருவருக்கும் 30 வயதுக்கு மேல் வித்தியாசம் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அடுத்தாக, பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஜோலிசன் என்பவர் தன்னை விட 4 அடி உயரம் குறைவான பெண்ணைத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

சுமார் 7 அடி 8 அங்குலம் உயரமுள்ள ஜோலிசன் 3 அடி உயரம் கொண்ட ஈவ்மின் என்பவரை காதலித்து கரம் பிடித்துள்ளார். இந்த ஜோடி பிரேசிலின் நட்சத்திர ஜோடிகள் அளவுக்கு பிரபலமாம்.

கேட்பதற்கு கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தாலும், 91 வயது கொண்ட பாட்டி தனது சொந்த பேரனை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அந்த பேரனுக்கு வயது 30 ஆம்! இத்தனை வருடங்கள் வித்தியாசம் இருக்கின்ற போதிலும் இருவரும் மனமொத்த தம்பதிகளாக வாழ்ந்து வருகிறார்கள்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?