பொதுவாகத் தவழும் குழந்தைகள் அல்லது ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தரையில் கிடப்பதைத் தவறுதலாக வாயில் எடுத்துப் போட்டுக் கொள்வார்கள்.
பெற்றோர்களின் கவனக்குறைவினால் குழந்தைகள் நாணயங்களை விழுங்குவது போன்ற சம்பவங்கள் பல்வேறு இடங்களில் நிகழ்ந்துள்ளது. ஆனால் இங்கு 35 வயதுடைய நபர் இது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார்.
துருக்கியின் இபேக்யோலு என்ற பகுதியைச் சேர்ந்த நபர் திடீரென தனக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
உடனே அவரது சகோதரர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். வயிறு வலி என்று அனுமதிக்கப்பட்ட அவரை மருத்துவர்கள் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்துள்ளனர்.
அங்கே மருத்துவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில், அந்த நபரின் வயிற்றில் பேட்டரிகள், காந்தம், நகங்கள், கண்ணாடி துண்டுகள், ஸ்க்ரூஸ், கற்கள் எனக் கிட்டத்தட்ட 233 பொருட்கள் இருந்துள்ளன.
இதனையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்து வயிற்றிலிருந்த அனைத்து பொருட்களையும் மருத்துவர்கள் எடுத்துள்ளனர்
இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில்
அறுவை சிகிச்சையின்போது ஒன்றிரண்டு நகங்கள் வயிற்றுப் பகுதியில் சிக்கி இருந்தது, பெருங்குடலில் இரண்டு உலோகத் துண்டுகள் இருந்தன.
இவை அனைத்தும் முழுமையாகச் சுத்தம் செய்துவிட்டதாகத் தெரிவித்த மருத்துவர், "குழந்தைகள் இது போன்ற காரியங்களில் ஈடுபடுவதை நாம் கேள்விப் பட்டிருப்போம் ஆனால் இது சற்று புதிதாக உள்ளது" என்றார்.
பெரியவர்களிடத்தில் நடந்தால் அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் அல்லது கைதிகள், குற்றவாளிகள்தான் இதுபோன்ற செயலில் ஈடுபடுவார்கள். ஏன் அவர் இந்த பொருட்களையெல்லாம் விழுங்கினார் என்பது இன்னும் தெரியவில்லை.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust