புதின் - எலான் மஸ்க் ரகசிய பேச்சு வார்த்தை நடந்ததா?; அமெரிக்க வல்லுநர் குற்றச்சாட்டு என்ன? Twitter
உலகம்

புதின் - எலான் மஸ்க் ரகசிய பேச்சு வார்த்தை நடந்ததா? அமெரிக்க வல்லுநர் குற்றச்சாட்டு என்ன?

எலான் மஸ்க் அமைதிக்கான திட்டத்தை வெளியிடும் முன்னர் புதினிடம் பேசியதாக அமெரிக்க அரசியல் வல்லுநர் இவான் குற்றம் சுமத்தியிருக்கிறார். "புதின் என்ன விலை கொடுத்தும் நினைத்ததைச் சாதிப்பார்" என மஸ்க் அவரிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

Antony Ajay R

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில் போரினை முடிவுக்கு கொண்டுவரும் ஒரு அமைதித் திட்டத்தை எலான் மஸ்க் வெளியிட்டிருந்தார். அந்த அமைதி திட்டத்தின் மீது பல கேள்விகள் எழுந்து வருகிறது.

எலான் மஸ்க் இந்த அமைதி திட்டத்தை அறிவிப்பதற்கு முன்னர் ரஷ்ய அதிபருடன் பேசியதாக கூறப்படுகிறது. அமெரிக்க அரசியல் வல்லுநரான இவான் ப்ரெம்மெர் எலான் மஸ்கை சந்தித்ததாகவும் அப்போது "புதின் என்ன விலை கொடுத்தும் நினைத்ததைச் சாதிப்பார்" என்று மஸ்க் அவரிடம் கூறியதாகவும் யூரேசியா வாடிக்கையாளர்களுக்கு மெயில் மூலம் தெரிவித்துள்ளார்.

மேலும் மஸ்க், Luhansk, Donetsk, Kherson and Zaporizhzhia ஆகிய ரஷ்ய ஆக்கிரமிப்புகளை அங்கீகரித்தால் ரஷ்யா பேச்சு வார்த்தையில் ஈடுபடுவார்கள் எனவும் அப்படி இல்லை என்றால் அணு ஆயுத தாக்குதல் நடைபெறலாம் எனவும் கூறியதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

ஆனால் இந்த செய்திகளை எலான் மஸ்க் மறுத்துள்ளார். அவர் இதற்கு முன்னர் ஒரே ஒரு முறை மட்டுமே புதினை சந்தித்ததாகவும் அப்போது விண்வெளி குறித்தே உரையாடியதாகவும் கூறியுள்ளார்.

ட்விட்டரில் ஒரு நெட்டிசனின் கேள்விக்கு இந்த பதிலை அவர் கூறியுள்ளார்.

அமைதி திட்டம்

எலான் மஸ்க் கடந்த அக்டோபர் 3ம் தேதி யுக்ரைன் போரில் அமைதியை நிலைநாட்டுவதற்கான ஒரு வழியை வெளியிட்டார். அதில்,

-ரஷ்யா ஆக்கிரமித்த பகுதிகளில் ஐநா முன்னிலையில் தேர்தல் நடத்த வேண்டும்.

- கிரிமியாவை ரஷ்யாவிடம் ஒப்படைக்க வேண்டும்.

- கிரிமியாவுக்கு தண்ணீர் வழங்குவது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

- உக்ரைன் நடுநிலைத்தன்மையை கடைபிடிப்பது.

இதனை ட்விட்டரில் கருத்து கணிப்பாக பதிவிட்டார். 59.1% மக்கள் எலான் மஸ்கின் ஐடியாவை ஏற்கவில்லை எனக் கூறியுள்ளனர்.

எலான் மஸ்கின் இந்த ட்வீட்டுக்கு பல எதிர்ப்புகள் வந்திருக்கின்றன. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, நீங்கள் எதை அதிகம் விரும்புகிறீர்கள் மஸ்க், உக்ரைன் ஆதரவையா அல்லது ரஷ்ய ஆதரவையா என ட்வீட் செய்துள்ளார். இதனை கருத்துக்கணிப்பாக பதிவிட்டிருந்தார் 78.8% மக்கள் உக்ரைன் ஆதரவு எனத் தேர்ந்தெடுத்திருந்தனர்.

ரஷ்யா செய்தி தொடர்பாளர் மிர்டி பெஸ்கோ எலான் மஸ்கின் இந்த திட்டத்துக்காக அவரை பாராட்டியுள்ளார்.

மஸ்க் போன்ற ஒரு நபர் இந்த சூழலில் அமைதியை நோக்கி சிந்திப்பது முக்கியமான ஒன்று என மாஸ்கொ சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?