உலகில் மழையே பெய்யாத கிராமம் இது தானா? எமன் நாட்டின் அல் ஹுதாயிபின் கதை என்ன? | Fact Check Twitter
உலகம்

உலகில் மழையே பெய்யாத கிராமம் இது தானா? எமன் நாட்டின் அல் ஹுதாயிபின் கதை என்ன? | Fact Check

அது இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தில் இருக்கும் பசிகாட் கிராமம் என்று கூறப்பட்டது. மலையின் மேல், மேகங்களுக்கு மேலே அமைந்திருப்பதால் இந்த கிராமத்தில் மழையே வராது என்று கூறப்பட்டது.

Keerthanaa R

உலகில் மாதம் மும்மாரி பொழியும் இடங்கள், சூரியன் அஸ்தமனமே ஆகாத இடம், சுத்தமான காற்று உள்ள இடம் என்று இயற்கையின் அதிசயங்கள் தாங்கிய இடங்கள் குறித்து நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.

மழையே பெய்யாத ஒரு இடத்தை பற்றி கேள்விப்பட்டிருக்கிறோமா?

ஓ, தெரியுமே! பாலைவனத்துல தான் மழையே வராதே என சொன்னால், தவறான பதில்.

சில பாலைவனங்களில் கூட அவ்வப்போது மழை வருவதுண்டு.

ஆனால் இந்த கிராமத்தில், இது வரை ஒரு துளி மழை கூட பெய்ததில்லை

சில தினங்களுக்கு முன்னர் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. அழகிய வெண்மேகங்கள் சூழ்ந்த மலைபிரதேசத்தில், பறவைகள் கூச்சலிட்டுக்கொண்டும், உலகை எட்டிப்பார்க்க கதிரவனும் காத்திருக்கும் அந்த காட்சி, எந்த இடத்தினுடையது என்று பலரும் ஆச்சரியப்பட்டு போயினர்.

அது இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தில் இருக்கும் பசிகாட் கிராமம் என்று கூறப்பட்டது. மலையின் மேல், மேகங்களுக்கு மேலே அமைந்திருப்பதால் இந்த கிராமத்தில் மழையே வராது என்று கூறப்பட்டது.

ஆனால் அது, எமன் நாட்டில் இருக்கும் அல் ஹுதாயிப் என்ற கிராமம். இங்கு மழையே இதுவரை பொழிந்ததில்லை என்பதற்கு சான்றுகள் இல்லை.

இந்தியா டுடே செய்தி நிறுவனம் நடத்திய விசாரணையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது

வைரலான வீடியோவை வைத்து, Reverse Image Search செய்து பார்த்ததில், மற்ற நாடுகளின் பத்திரிகைகள் இந்த கிராமத்தை பற்றி அறிக்கைகள் வெளியிட்டுள்ளன. அவற்றில் கூட இந்த கிராமம் எமன் நாட்டில் இருக்கும் இடம் தான் என்பதற்கு சான்றுகள் இருந்தாலும், அவை யாவுமே மழையே பொழியாது என்பதை உறுதியாக கூறவில்லை.

கடல்மட்டத்தில் இருந்து சுமார் 3,200 அடி உயரத்தில் இருக்கும் இந்த கிராமத்தில், மழை பொழியும் சாத்தியக்கூறுகள் மற்ற இடங்களை விடவும் கொஞ்சம் குறைவாக இருக்கலாம்

இந்த கிராமத்தில், எமனின் தலை சிறந்த காபிகள் இங்கு தயாரிக்கப்படுவதாக அந்த நாட்டின் conflict analyst ஒருவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், மெஹ்லம் எஸ் சாட்ரிவாலா என்ற Traveloguer இந்த இடத்தை பற்றி கூறியபோது, “சொர்க்கத்தின் மறு உருவமாக தோன்றியது அல் ஹுதாயிப். இந்த இடத்தில் இருப்பது கனவில் இருப்பதுபோல இருந்தது. தினமும் மழைபெய்தது" என்று கூறியிருந்தார்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?