Elon Musk : வளர்ப்பு நாயை ட்விட்டர் CEO ஆக்கிய மஸ்க் - பராக் அகர்வால் அவமதிக்கப்பட்டாரா? Twitter
உலகம்

Elon Musk : வளர்ப்பு நாயை ட்விட்டர் CEO ஆக்கிய மஸ்க் - பராக் அகர்வால் அவமதிக்கப்பட்டாரா?

Antony Ajay R

ட்விட்டர் நிறுவனத்தின் சி.இ.ஓ என தனது வளர்ப்பு நாயை அறிமுகப்படுத்தியிருக்கிறார் எலான் மஸ்க்.

ட்விட்டர் எலான் மஸ்கின் கைகளில் வந்ததில் இருந்தே பல மாற்றங்களை கண்டுள்ளது. பெரும்பாலான பயனர்கள் இது குரங்கு கையில் பூமாலையைக் கொடுத்தது போன்றது என விமர்சிக்கத் தொடங்கினர்.

அப்படியாக பல குறும்புகளை செய்திருக்கிறார் எலான் மஸ்க். அவற்றில் ஒன்று தான் இப்போது ட்ரெண்டாகி வருகிறது.

ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றியதும் முதல் வேலையாக அதன் பழைய சி.இ.ஓ பராக் அகர்வாலை வேலையில் இருந்து நீக்கினார் எலான் மஸ்க்.

மஸ்க் தனது வளர்ப்பு நாயான ஃப்லோகி என்ற நாய்க்கு டி-சர்ட் அணிவித்து சி.இ.ஓ நாற்காலியில் அமர வைத்திருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து, "ட்விட்டரின் புதிய சி.இ.ஓ சிறப்பு! வேறேந்த நபரையும் விட சிறந்தவர்" என தலைபிட்டுள்ளார்.

இது பழைய சி.இ.ஓ-வான பராக் அகர்வாலை அவமதிப்பதாக உள்ளது என நெட்டிசங்கள் கருதுகின்றனர்.

பராக் அகர்வால் நீக்கப்பட்ட பிறகு ட்விட்டரின் சி.இ.ஓ -வாக யார் பொறுப்பேற்பார் என்ற கேள்வி எழுந்தது. யாரும் அந்த பதிவியில் இல்லை எனக் கூறிய எலான் மஸ்கே பிறகு சி.இ.ஓ ஆனார்.

அதற்கு முன்னதாக, ”நான் எந்த நிறுவனத்துக்கும் சி.இ.ஓவாக இருக்க விரும்பவில்லை” எனக் கூறியிருந்தார். ஆனால் அவர் ஏற்கெனவே ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்களின் சி.இ.ஓ.வாக இருக்கிறார்.

கடந்த டிசம்பர் மாதம், "இந்த பதவிக்கு தகுந்த முட்டாளை கண்டுபிடித்ததும் பதவி விலகுவேன்" என அவர் கூறியிருந்தார்.

எலான் மஸ்கின் நடவடிக்கைகள் நகைச்சுவையாக இருந்தாலும் அதனால் வெறுப்படைவதாக பலரும் கூறிவருகின்றனர்.

உதாரணமாக நேற்று தான் அதிக ட்வீட்கள் போடுவதாக தனக்கு தானே போட்டுக்கொண்ட பாலியல் ரீதியிலான மீம் பலரையும் முகம் சுழிக்க வைத்தது.

இந்த ட்வீட்டை பலரும் நகைச்சுவையாக எடுத்துக்கொண்டாலும் இதை முன்னிட்டு ’ட்விட்டரை விட்டு விலகுவதாக பலர் கூறி வருகின்றனர்'.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?