இலவச உணவு திட்டத்தை அறிமுகப்படுத்திய துபாய் அரசு டிவிட்டர்
உலகம்

"பசியோடு யாரும் உறங்கக்கூடாது" - 'Bread For All' திட்டத்தை அறிமுகப்படுத்திய துபாய் அரசு

இதனால் தினக் கூலி வேலை பார்ப்பவர்கள், டெலிவரி ஆட்கள், பலரும் நன்மையடைந்து வருகின்றனர். இந்த இயந்திரங்களில், நாளின் எந்த வேளையிலும் ரொட்டிகளை பெறலாம்.

Keerthanaa R

இனி யாரும் பசியுடன் உறங்கக்கூடாது எனக் கூறி, இலவசமாக ரொட்டி (பிரெட்) தயாரித்துக் கொடுக்கும் இயந்திரங்களை நாடு முழுவதும் பல இடங்களில் வைத்துள்ளது துபாய் அரசு.

வறுமை, உணவு பற்றாக்குறை, இப்படி ஏதோ ஒரு காரணத்திற்காகப் பசியுடன் உறங்கும் பலர் இன்றும் இருக்கத்தான் செய்கின்றனர். இதனை சரி செய்ய, துபாய் அரசு புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளது. 

Bread For All என்று பெயரிடப்பட்டுள்ள இந்த முயற்சி,  யாரும்  உணவின்மையால், பசியுடன் உறங்கக் கூடாது என்ற நோக்கத்துடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது.  இந்த இயந்திரங்கள் Pre-program செய்யப்பட்டுள்ளன. வாடிக்கையாளர் கேட்கும் நேரத்தில், சூடான ரொட்டிகளை இவை தயாரித்து கொடுக்கின்றன.  நாம் காசு போட்டால் உணவுகளை கொடுக்கும் வெண்டிங் மெஷின்களை நாம் நிறைய இடங்களில் பார்த்திருப்போம். அவற்றுக்கும் இந்த இயந்திரங்களுக்கும் இருக்கும் வித்தியாசம், இவற்றில் நாம் காசு போடவேண்டாம். ரொட்டிகளை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

இதனால் தினக் கூலி வேலை பார்ப்பவர்கள், டெலிவரி ஆட்கள், பலரும் நன்மையடைந்து வருகின்றனர். அவாஃப் மற்றும் மைனர்ஸ் அஃபேர்ஸ் அறக்கட்டளையின் (ஏ.எம்.ஏ.எஃப்) கீழ் உள்ள முகமது பின் ரஷீத் குளோபல் சென்டர் ஃபார் என்டோமென்ட் கன்சல்டன்சி (எம்.பி.ஆர்.ஜி.சி.இ.சி) இந்த முயற்சியை தொடங்கியுள்ளது. இந்த இயந்திரங்களில், நாளின் எந்த வேளையிலும் ரொட்டிகளை பெறலாம்.

பல வணிகங்களின் முகப்பில் வைக்கப்பட்டிருக்கும் இந்த இயந்திரங்களில் ஒரு நாளைக்கு இரண்டு முறை சரக்குகள் ரீஃபில் செய்யப்படுகின்றன. இதில் அரபிக் பிரெட் மற்றும் ஃபிங்கர் ரோல்ஸ் என இரு விதமான பிரெட் வகைகள் கிடைக்கின்றன. எது வேண்டுமோ தேர்ந்தெடுத்து, Click to Order  என்ற பட்டனை அழுத்தினால், ஃபிரெஷாக, ஒரு நிமிடத்தில் பிரெட் தயாரித்துக் கொடுக்கும் வண்ணம் இந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

கோவிட் -19 தொற்றின்போது துணை ஜனாதிபதியும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் "ஐக்கிய அரபு எமிரேட்ஸில், யாரும் பசியுடன் உறங்கக் கூடாது" என்று கூறியிருந்தார். அதன் விளைவாகவே இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. விருப்பமிருந்தால், பொதுமக்களும் இந்த தொண்டில் பங்காற்றலாம் எனவும் அரசு தெரிவித்திருக்கிறது.

மக்கள் இயந்திரத்தின் மூலம் நன்கொடை அளிக்கலாம்.  நன்கொடை பொத்தானைக் கிளிக் செய்து, 10 திராம்கள் முதல், எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கொடுக்கலாம். இல்லையெனில் அவர்கள்  தங்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்ட்களை பயன்படுத்தியும் நன்கொடை அளிக்கும் வசதி உள்ளது.

வரும் நாட்களில் இந்த இயந்திரங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது துபாய் அரசு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?