கம்போடியா முதல் தாய்லாந்து வரை: ரூ.50 ஆயிரம் போதும், இந்த 9 நாடுகளுக்கு பயணம் செய்யலாம்! Travel / Canva
உலகம்

கம்போடியா முதல் தாய்லாந்து வரை: ரூ.50 ஆயிரம் போதும், இந்த 9 நாடுகளுக்கு பயணம் செய்யலாம்!

அவரவர் பட்ஜட்டுக்கு ஏற்றது போல உள்ளூரிலோ பக்கத்து மாநிலங்கள் வரைக் கூட சென்று வருவோம். வெளிநாட்டு பயணம் கோடீஸ்வரர்களுக்கானது என ஒதுக்கி வைத்துள்ளோம். ஆனால் 50000 ரூபாய் இருந்தாலே நம்மால் சென்றுவரக் கூடிய இடங்களும் இருக்கின்றன.

Antony Ajay R

பயணம் செய்வதென்றால் யாருக்குத் தான் பிடிக்காது? கண்டம் தாண்டி கண்டம் பறவைகளைப் போல பறக்க வேண்டும் என்ற ஆசை எல்லாருக்கும் தான் இருக்கும். ஆனால் நாம் வீடுகள், பள்ளி, கல்லூரி, அலுவலகம் என நாலு சுவர்களைக் கொண்ட பெட்டிகளுள்ளேயே அடைந்து வாழ்க்கையைக் கடத்திவிடுகிறோம்.

பயணம் செய்வது பல நாட்கள் வேலை செய்து அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றியப் பின் அதிகம் பணம் வைத்திருப்பவர்களுக்கான பொழுதுபோக்காகவே இருக்கிறது. குறைந்த செலவில் பயணம் செய்ய முடியாது நம்மில் பலருக்கும் வருத்தம் தரக் கூடியதாக இருக்கும்.

அவரவர் பட்ஜட்டுக்கு ஏற்றது போல உள்ளூரிலோ பக்கத்து மாநிலங்கள் வரைக் கூட சென்று வருவோம். வெளிநாட்டு பயணம் கோடீஸ்வரர்களுக்கானது என ஒதுக்கி வைத்துள்ளோம். ஆனால் 50000 ரூபாய் இருந்தாலே நம்மால் சென்றுவரக் கூடிய இடங்களும் இருக்கின்றன.

ஸ்ரீலங்கா

நம் அண்டை நாடான இலங்கையின் இயற்கை அழகு பற்றி நாம் அதிகம் அறிந்திருப்பதில்லை. ஆசியாவின் வைரம் எனப்படுவதற்கு முழுத் தகுதி வாய்ந்தது இந்த தீவு நாடு. அங்குள்ள தேயிலைத் தோட்டங்கள், அடர்ந்த காடுகள், மதிமயக்கும் நீர்வீழ்ச்சிகள், சிறிய தீவுகள், வேலைப்பாடுகள் மிகுந்த புத்த கோயில்கள் என நம்மை ஆச்சரியத்தில் பல இடங்கள் அங்கு இருக்கின்றன.

கம்போடியா

பயணம் செய்யும் ஒவ்வொருவருக்கும் ஒரு விருப்பம் இருக்கும். கலாச்சாரம் மற்றும் வரலாறுதான் உங்கள் விருப்பம் என்றால் நிச்சயமாக செல்ல வேண்டிய இடம் கம்போடியா. குறிப்பாக அங்குள்ள அங்கோர்வாட் கோயிலுக்கு நிச்சயமாக சென்று பார்வையிட வேண்டும்.

பூடான்

உலகிலேயே அழகான நிலப்பரப்புகளைக் கொண்ட நாடுகள் என லிஸ்ட் எடுத்தால் நிச்சயமாக பூடானுக்கு அதில் இடமிருக்கும். இங்குள்ள மலைகளும் சரி மக்களும் நம்மை அங்கிருந்து திரும்ப முடியாத அளவுக்கு வசீகரித்துவிடுவார்கள்.

சிங்கப்பூர்

கலாச்சாரங்களைப் பார்வையிடுபவர்களுக்கும் நவீன தொழில்நுட்பங்களின் மாயாஜாலத்தை காண விரும்புபவர்களுக்கு சிறந்த இடமாக இருக்கும் சிங்கப்பூர். சில இடங்களில் நுழைவுக்கட்டணம் அதிகமாக இருந்தால் தவிர்த்துவிடலாம்.

மலேசியா

வானளாவிய கட்டடங்களும் வானத்தை பிரதிபலிக்கும் கடற்கரைகளும் மலேசியாவின் சிறப்பு. பெர்ஹென்டியன்ஸ் தீவுக்கூட்டங்களையும், முருகன் கோவிலையும் சுற்றிப்பார்த்து களிப்புற நமக்கு 50 ஆயிரம் போதுமானது.

பாலி

பாலி குறைந்த செலவில் செல்லக் கூடிய பிரபலமான சுற்றுலாத்தலாமாகும். தம்பதிகளாக பயணம் செல்லவும் இது சிறந்த இடமாக இருக்கும். தமிழகத்தை சுற்றியவர்களுக்கு பாலி கனவு உலகம் போல இருக்கும்.

தாய்லாந்து

தாய்லாந்து ஆசியாவில் உள்ள பிரபலமான சுற்றுலாத்தலமாகும். இங்குள்ள பழமை வாய்ந்த நினைவுச் சின்னங்களும் பிரம்மாண்டமான புத்த கோவில்களும் நிச்சயம் பார்க்க வேண்டிய ஒன்று. கடற்கரைகளும் காடுகளும் கூட நம்மை ஆச்சரியப்படுத்தும். கட்டுப்பாட்டுடன் செலவு செய்தால் நிச்சயமாக 50 ஆயிரம் ரூபாயில் தாய்லாந்தை சுற்றிப்பார்த்துவிடலாம்.

துபாய்

துபாயில் உள்ள வானளாவிய கட்டிடங்களைப் பார்க்கும் போது நம்மை வா வா என அழைப்பதாகவேத் தோன்றும், அப்படி வசீகரமான இடமாக மாறிவருகிறது துபாய். துபாய் சென்றுவர 50 ஆயிரம் ரூபாய் போதுமென்றாலும் எல்லா சாகசங்களையும் அனுபவிக்க அதிக பணம் தேவைப்படலாம். புர்ஜ் கலீபா போன்ற இடங்களுக்கு பட்ஜெட்டுக்குள் முடியாதது தான்.

மாலத்தீவுகள்

இந்தியாவில் இருந்து சர்வதேச சுற்றுலா செல்ல விரும்பும் யாருக்கும் முதல் தேர்வாக இருப்பது மாலத்தீவுகள் தான். தமிழ் நாட்டில் இருந்து மாலத்தீவு செல்லாத பிரபலங்களே இல்லை எனலாம். ஆனால் இங்கு சென்று வர 50000 போம் என பலருக்கும் தெரியாது.

சிசெல்ஸ்

தென்னாப்பிரிக்காவில் உள்ள சிசெல்ஸ் தீவு உலகில் உள்ள அழகிய தீவுகளில் ஒன்று. இங்கு பல தீவுகள் இருக்கின்றன. நீங்கள் ஒரு கடற்கரை பிரியர் என்றால் மிஸ் செய்யாமல் இங்கு வரலாம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?