நாம் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக எவ்வளவு செலவு செய்வோம்? நாம் சம்பாதிக்கும் அளவைப் பொறுத்து ஒரு நாளைக்கு 100 முதல் 500 ரூபாய் வரை செலவாகலாம்.
கொஞ்சம் ஹை கிளாஸாக இருந்தால் இது ஆயிரங்களில் இருக்கும். ஆனால் இங்கு ஒரு பெண்ணின் தினசரி செலவு லட்சங்களில் உள்ளது.
அதுவும் அவரின் செலவுகள் அத்தியாவசியங்களுக்கு இல்லை. நினைத்ததை நினைத்த நேரத்தில் வாங்குகிறார். செலவு செய்வதை ஹாபியாக கருதுகிறார் அந்த பெண்.
துபாயில் வாழ்கிறார் சௌதி என்ற பெண். இவரது கணவரின் பெயர் ஜமால். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகிறது.
கணவர் ஜமால் சம்பாதிக்கும் பணத்தை செலவு செய்வது தான் ஹவுஸ் வைஃப் ஆக இருக்கும் சௌதியின் ஹாபி. ஒரு நாளைக்கு குறைந்தது 70 லட்சம் ரூபாய் செலவு செய்கிறார்.
"ஜமாலின் மனப்போக்குக்கு ஏற்றவாறு 3 முதல் 70 லட்சம் வரை ஒரு நாளைக்கு நாங்கள் ஷாப்பிங் செய்வோம்" என்கிறார் சௌதி.
தான் துபாயில் வாழும் ஒரு பணக்கார மனைவி என்றும், டிக் டாக் மற்றும் இன்ஸ்டாகிராமில் மில்லியன் கணக்கில் தனக்கு ஃபாலோவர்ஸ் இருக்கிறார்கள் என்றும் சொல்கிறார் சௌதி.
தனது சமூக வலைத்தள பக்கங்களில் கணவர் ஜமாலுடன் இவர் மேற்கொள்ளும் சுற்றுலாக்கள், அல்லது வெளியில் செல்வது, ஷாப்பிங் செய்வது குறித்த புகைப்படங்களை அவர் பகிர்வார்.
கணவன் மனைவி இருவரிடமும் ஒரே மாதிரியான கார்கள் இருக்கின்றன.
கவர் லைஃப் என்ற பத்திரிகையுடன் பேசியபோது, சௌதி தனக்கு டிசைனர் பேக்குகள் மற்றும் உடைகள் தான் பிடிக்கும் என்றார். உலகின் பல நாடுகளுக்கு பயணம் செய்துள்ள சௌதி, ஒரு ட்ரிப்புக்கு குறைந்தது 14 முதல் 15 லட்சம் வரை செலவு செய்கிறார்.
"எங்கள் இருவருக்குமே மாலத்தீவு ரொம்ப பிடிக்கும். அதே போல லண்டனுக்கும் அடிக்கடி சென்று வருவோம். அடுத்ததாக நாங்கள் ஜப்பான் செல்கிறோம்" என்றார்.
சௌதிக்கு சர்பிரைஸ்கல் மிகவும் பிடிக்குமாம். தன் கணவருக்கு தன்னை சர்பிரைஸ் செய்வது பிடிக்குமாம்.
விரைவில் குழந்தை பெற்று செட்டில் ஆவது குறித்து ஆலோசித்துக் கொண்டிருக்கிறார்களாம் இந்த தம்பதியினர்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust