Dubai's Museum of The Future lets you get a glimpse of life in 2071 Twitter
உலகம்

துபாயின் புதிய அடையாளமாக மாறிய அருங்காட்சியகம் - லட்சக்கணக்கான பார்வையாளர்கள் குவிவது ஏன்?

Priyadharshini R

துபாயின் புதிய அடையாளமாக மாறியுள்ளது பிரம்மாண்ட அருங்காட்சியகம். இந்த கட்டிடம் 255 அடி உயரம் கொண்டதாகும்.

இந்த கட்டிடத்தில் மொத்தம் 7 தளங்கள் உள்ளன. இதில் 5 தளங்கள் பார்வையாளர்களை பிரமிக்க வைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அருங்காட்சியகத்தில் பிரபலமாக உள்ளது OSS ஹோப். அதாவது நீங்கள் எப்போதாவது விண்வெளிக்குச் செல்ல விரும்பினால், இதான் அந்த நேரம்.

நாசாவின் அங்கீகாரம் பெற்ற இந்த மாதிரி விண்வெளி நிலையத்தை நீங்கள் பார்வையிடலாம். 2071 ஆம் ஆண்டில் ஒரு பெரிய விண்வெளி நிலையத்தில் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதைப் பற்றிய நுண்ணறிவுகளை இங்கே பார்வையாளர்கள் பெறலாம்

இது ​​பூமியிலிருந்து 600 கிமீ மேலே பயணம் செய்வது போல் இருக்கும். ஜன்னலுக்கு வெளியே சந்திரனையும் மற்ற கிரகங்களையும் நேரில் பார்ப்பது போன்ற அனுபவத்தை கொடுக்கும்

டிஜிட்டல் அமேசான்

அமேசான் காடுகளை துபாயின் இந்த அருங்காட்சியகத்தில் பார்க்க முடியும். 3டி அமைப்பில் நூற்றுக்கான வன உயிரினங்களையும் பூச்சிகளையும் காணலாம். அதோடு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி மனிதர்கள் சுற்றுச்சூழல் அமைப்பை எவ்வாறு குணப்படுத்த முடியும் என்பதையும் இதில் காணலாம்.

இந்த அருங்காட்சியகத்தில் அமேகா என்ற பெயரிடப்பட்ட அதிநவீன ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோவை அருங்காட்சியகத்தில் ஊழியர்களின் ஒருவராக நிர்வாகம் அறிவித்துள்ளது.

பல மொழிகள் பேசும் திறன் கொண்ட அமேகா வெளியூரிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என கூறப்படுகின்றது.

77 அடி உயரத்தில் உள்ள இந்த கட்டிடக்கலை அதிசயம் பிப்ரவரி 2022 இல் திறக்கப்பட்டது, இப்போது துபாயின் முதன்மையான சுற்றுலா தலங்களில் ஒன்றாக மாறியுள்ளது. இது ஏற்கனவே 163 நாடுகளில் இருந்து ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?