crime  twitter
உலகம்

நாள் முழுவதும் க்ரைம் த்ரில்லர் பார்க்கத் தயாரா? ஒரே நாளில் 1.8 லட்சம் சம்பாதிக்கலாம்!

புத்தகங்கள், திரைப்படங்கள், பாட்காஸ்ட்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எனப் பல வகைகளில் நிஜ குற்றச் சம்பவக் கதைகள் கிடைக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை கொலைகள் சம்பந்தப்பட்டதாகவே இருக்கின்றன. 40% சீரியல் கொலைகளுடன் தொடர்புடையவை.

Antony Ajay R

உண்மை குற்றங்கள் அடிப்படையிலான படங்கள், சீரிஸ்கள் அதிக வரவேற்பைப் பெற்று வருகின்றன. இந்த சூழலில் உண்மை சம்பவங்கள் அடிப்படையிலான படைப்புகளை மட்டுமே உருவாக்கும் தளம் ஒன்று 24 மணி நேரம் க்ரைம் படைப்புகளைப் பார்க்கும் நபரைத் தேடி வருகிறது.

இரத்தம், கொலை, பாலியல் குற்றங்கள், வழக்குகள், காவல்துறை, அரசாங்கம், நிழல் உலகம் எனக் குற்றத் திரைப்படங்கள் நம்மை அழைத்துச் செல்லும் உலகம் முற்றிலும் வேறுபட்டது. அந்த உலகத்தின் கதைகளை ஒரு நாள் முழுவதும் இருந்து பார்க்க முடியும் என்கிற நம்பிக்கை உங்களுக்கு இருந்தால் நீங்கள் 2400 டாலர்கள் அதாவது 1.8 லட்சம் ரூபாய் வெல்லலாம்.

புத்தகங்கள், திரைப்படங்கள், பாட்காஸ்ட்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எனப் பல வகைகளில் நிஜ குற்றச் சம்பவக் கதைகள் கிடைக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை கொலைகள் சம்பந்தப்பட்டதாகவே இருக்கின்றன. 40% சீரியல் கொலைகளுடன் தொடர்புடையவை.

MagellanTV என்ற தளம் முழுக்க முழுக்க நிஜ குற்றச் சம்பவங்கள் அடிப்படையிலான படைப்புகளை வழங்குகிறது. இந்த நிறுவனம் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் படி, 24 மணி நேரம் நிஜ குற்ற ஆவணங்களைப் பார்ப்பவர்கள் அவர்களின் அனுபவத்தை சமூக வலைத்தளங்களில் பகிர வேண்டும். இதனைச் சரியாகச் செய்து முடிப்பவர்களுக்குப் பணம் வழங்கப்படும். அத்துடன் ஒரு ஆண்டு MagellanTV இலவச சப்ஸ்கிரிப்ஷனும் வழங்கப்படும்.

கேட்பதற்கு இது எளிமையான ஒன்றாக இருக்கலாம். ஆனால் இது குறித்து அந்த நிறுவனத்தினர், “இந்த சவாலை வெல்பவர் நிஜக் குற்றங்களுக்காக வாழ்ந்தவராக இருக்க வேண்டும். மிக மோசமான சீரியல் கொலைகாரர்கள் கொடூரங்களை அவர்கள் காண வேண்டியிருக்கும். அமானுஷ்யமான அச்சுறுத்தும் நிகழ்வுகளைக் காண வேண்டியிருக்கும்” என்று கூறியுள்ளனர்.

இதற்கு அப்ளை செய்பவர்கள் அவர்கள் ஏன் இந்த சவாலுக்குத் தகுதியானவர்கள் என்பதை வீடியோ பதிவாக அனுப்ப வேண்டும் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?