Egypt: Researchers discover 2000 mummified ram heads in ancient Egyptian temple Twitter
உலகம்

எகிப்து: கோவிலில் கண்டுபிடிக்கப்பட்ட 2000 மம்மிகள்-அகழ்வாராய்ச்சியாளர்கள் அதிர்ந்தது ஏன்?

மம்மி செய்யப்பட்ட விலங்குகளின் எச்சங்களுடன், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஐந்து மீட்டர் (16 அடி) தடிமன் கொண்ட சுவர்களைக் கொண்ட அரண்மனையின் எச்சங்களையும் கண்டுபிடித்தனர்.

Priyadharshini R

தெற்கு எகிப்தில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் 2,000க்கும் மேற்பட்ட மம்மியிடப்பட்ட ஆட்டின் தலைகள் மற்றும் ஒரு அரண்மனை பழைய ராஜ்ஜியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மம்மி (Mummy) என்பது காலத்தால் பாதுகாக்கப்பட்ட உயிரினத்தின் சடலத்தை குறிக்கிறது. இவ்வாறு காலத்தால் அழியாத மனித மம்மிகளையும், மற்ற விலங்குகளின் மம்மிகளையும் உலகமெங்கும் அகழ்வாராச்சியாளர்கள் கண்டுடெடுத்துள்ளனர்.

அந்த வகையில் தெற்கு எகிப்தில் உள்ள பண்டைய நகரமான அபிடோஸில் உள்ள ராம்செஸ் II கோவிலில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் 2,000 க்கும் மேற்பட்ட மம்மியிடப்பட்ட ஆட்டின் தலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த கண்டுபிடிப்பு டோலமிக் காலத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. டோலமிக் காலம் என்பது கிமு 51- 30 இடைப்பட்ட காலத்தில் எகிப்தை ஆண்ட கிரேக்க மொழி பேசும் டோலமிக் வம்சம் வாழ்ந்த காலமாகும்.

இதைப் பற்றி எகிப்திய சுற்றுலா மற்றும் தொல்பொருட்களுக்கான அமைச்சகம் குறிப்பிடுகையில், இறந்து சுமார் 1,000 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த இடத்தில் மம்மி செய்யப்பட்ட எச்சங்கள் விடப்பட்டதாக நம்பப்படுகிறது.

நாய்கள், செம்மறி ஆடுகள், பசுக்கள், காட்டு ஆடுகள், விண்மீன்கள் ஆகியன செம்மறியாட்டுத் தலைகளுடன் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அவை ராம்செஸ் II க்கு வழங்கப்பட்ட 'காணிக்கையாக' இருக்கலாம் என நம்பப்படுகிறது.

சமீபத்திய கண்டுபிடிப்பு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான காலத்தைப் பற்றி மேலும் அறிய ஆராய்ச்சியாளர்களுக்கு உதவுவதாகவும் அமைச்சகம் கூறியுள்ளது.

கெய்ரோவில் இருந்து தெற்கே சுமார் 435 கிலோமீட்டர்கள் (270 மைல்) தொலைவில் அமைந்துள்ள அபிடோஸ், கோவில்கள் மற்றும் பழங்கால கல்லறைகள் போன்றவற்றுக்கு பிரபலமானது.

இது எகிப்தில் அதிகம் பார்வையிடப்படாத தொல்பொருள் தளங்களில் ஒன்றாகும்.

மம்மி செய்யப்பட்ட விலங்குகளின் எச்சங்களுடன், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஐந்து மீட்டர் (16 அடி) தடிமன் கொண்ட சுவர்களைக் கொண்ட அரண்மனையின் எச்சங்களையும் கண்டுபிடித்தனர்.

அவர்கள் பல சிற்பங்கள், பாப்பைரி, பழங்கால மரங்களின் எச்சங்கள், தோல் ஆடைகள் மற்றும் காலணிகள் ஆகியவற்றைக் கண்டுபிடித்தனர்.

இதற்கு முன் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் எகிப்தின் வடக்குப்பகுதியில், வாய்க்குள் தங்கத்தினாலான நாக்குகள் வைக்கப்பட்ட சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான மம்மிகளை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டெடுத்துள்ளதாக அந்த நாட்டின் அரசு தெரிவித்தது குறிப்பிடதக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?