எலான் மஸ்க் Twitter
உலகம்

பாலியல் சர்ச்சையில் சிக்கிய எலான் மஸ்க் - குற்றத்தை மறைக்க பணம் கொடுத்தாரா?

Priyadharshini R

ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் தலைமை நிர்வாக செயல் அதிகாரியான வலம் வரும் எலான் மஸ்க், உலகின் முதல் நிலை பணக்காரராகத் திகழ்கிறார்.

தனது நிறுவனத்தின் தயாரிப்புகளை எப்போதுமே பரபரப்பாக பிரபலப்படுத்திக்கொள்வார் எலான் மஸ்க். அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் தினமும் தனது ட்விட்டர் பக்கத்திலிருந்து ட்வீட்டுகளை cool ஆகப் பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

Elon Musk

அதே வேளை புகழின் உச்சியில் இருப்பவர்கள் சில சமயங்களில் சர்ச்சையில் சிக்குவது உண்டு. அந்த வகையில் தற்போது ஒரு பாலியல் வழக்கில் சிக்கியுள்ளார் எலான் மஸ்க்.

பிரபல தொழிலதிபரான எலான் மஸ்கிற்கு சொந்தமாகத் தனி சொகுசு விமானம் உண்டு, அதில் பணிபுரியும் பெண் ஊழியரிடம் பாலியல் ரீதியாக எலான் மஸ்க் அணுகியதாகப் பிரபல செய்தி நிறுவனமான இன்சைடர் செய்தி வெளியிட்டுள்ளது.

Elon Musk

அதன்படி இந்த தகவலைப் பாதிக்கப்பட்ட பெண்ணின் நண்பர் கூறியதாகத் தெரிவித்துள்ளது. அந்த தகவலின் படி எலான் மஸ்க் தனக்குச் சொந்தமான விமானத்தில் (2016) பயணம் செய்யும் போது தனக்கு மசாஜ் செய்யச் சொன்னதாகவும் அப்போது எலான் மஸ்க் அந்த ஊழியரிடம் பாலியல் ரீதியாக அணுகியதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் அந்த பெண் ஊழியர் எலான் மஸ்கின் அறையினை விட்டு வெளியேறியதாகக் கூறப்படுகிறது.

இந்த செயலுக்காக அந்த பெண் ஊழியர் 2018 ம் ஆண்டு ஒரு வழக்கறிஞரை வைத்து ஸ்பேஸ் எக்ஸ் மீது புகார் அளித்திருந்தார்.

ஆனால் ஸ்பேஸ் எக்ஸ் அந்த பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அமெரிக்க டாலர் மதிப்பில் $250,000 கொடுத்து இந்த செய்தி வெளியே கூறாமல் இருக்குமாறு சொன்னதாகக் கூறப்படுகிறது.இந்த தகவல் குறித்து பிரபல ஊடகமான இன்ஸைடர் எலான் மஸ்கிடம் கேட்ட போது அவர் சரியான பதில் கூறவில்லை.

இதற்கிடையில் எலான் மஸ்க் தனது ட்விட்டர் பதிவில் "வரும் மாதங்களில் என் மீதான அரசியல் தாக்குதல்கள் அதிக அளவில் இருக்கும் எனக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?