கனடா: ஜஸ்டின் ட்ரூடோவை கடுமையாக தாக்கிய எலான் மஸ்க் - ஏன்? Twitter
உலகம்

கனடா: ஜஸ்டின் ட்ரூடோவை கடுமையாக தாக்கிய எலான் மஸ்க் - ஏன்?

Antony Ajay R

டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க். இவர் சமீபத்தில் ஜஸ்டின் ட்ரூடோவின் கனட அரசை கடுமையாகத் தாக்கி பேசியுள்ளார்.

கனட அரசாங்கம் சமீபத்தில் ஆன்லைனில் ஒளிபரப்பாகும் அனைத்து சேவைகளும் கனட அரசின் ஒழுங்குமுறை கட்டுப்பாடுகளுக்காக பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்த ஊடகவியளாலர் ஒருவரின் பதிவுக்கு ரியாக்ட் செய்துள்ள எலான் மஸ்க், "ஜஸ்டின் ட்ரூடோ பேச்சு சுதந்திரத்தை நசுக்க முயற்சிக்கிறார்" என விமர்சனம் செய்துள்ளார்.

அந்த ஊடகவியளாலரின் பதிவில், உலகிலேயே அடக்குமுறையான தணிக்கையை எல்லா ஆன்லைன் பாட்காஸ்ட்களுக்கும் போடுகிறது கனட அரசு எனக் கூறப்பட்டிருந்தது.

கருத்து சுதந்திரத்துக்கு எதிராக ட்ரூடோ அரசு குற்றம் சாட்டப்படுவது முதன்முறையல்ல.

பிப்ரவரி 2022ல், கனட வரலாற்றில் முதல்முறையாக எமர்ஜென்சி அறிமுகப்படுத்தப்பட்டது, கொரோனா தடுப்பூசிக்கு எதிரான  டிரக்கர் போராட்டங்களை முடக்க அரசு எடுத்த நடவடிக்கை கருத்து சுதந்திரத்துக்கு எதிரானதாக கருதப்பட்டது.

சமீபத்தில் கனட பிரதமர், காலிஸ்தான் தீவிரவாதி நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கூறிய கருத்து சர்ச்சையைக் கிளப்பியது.

ஜஸ்டின் ட்ரூடோவின் கருத்தை இந்திய அரசாங்கம் நிராகரித்தது. அரசியல் உள்நோக்கம் கொண்ட கருத்து என விமர்சித்தது. மேலும் பிரதமரின் கருத்துக்கு வலு சேர்க்கும் எந்த ஆதாரத்தையும் இதுவரை கனட அரசாங்கம் வெளிப்படுத்தவில்லை.

இந்த விவகாரத்தில் இரண்டுநாடுகளும் தூதுவர்களை வெளியனுப்பினர். இந்தியா விசா வழங்குவதை நிறுத்தியது.

கனடாவில் இந்திய எதிர்ப்பு மனநிலை ஓங்கியிருக்கிறது. அங்கிருக்கும் இந்திய மக்களை இது அச்சுறுத்தியிருக்கிறது. அரசியல் காரணங்களுக்காக இந்திய-வெறுப்புக் குற்றங்கள் மன்னிக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

சர்வதேச அரங்கில் தொடர்ந்து ஜஸ்டின் ட்ரூடோவின் பெயருக்கு கலங்கம் ஏற்பட்டு வருகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?