எலான் மஸ்க் Twitter
உலகம்

Twitter: Bioவை மாற்றிய மஸ்க்; கையில் sink உடன் தலைமையகத்திற்கு சென்ற ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர்

Keerthanaa R

டிவிட்டர் தலைமை அலுவலகத்தில் கைக்கழுவும் தொட்டியுடன் (sink) உள்ளே சென்ற எலான் மஸ்க்கின் வீடியோ இணையத்தில் படுவைரலாகி வருகிறது.

டிவிட்டர் நிறுவனத்தை பல தடைகளுக்கு பிறகு சொந்தமாக்கவுள்ளார் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க். இந்நிலையில் சான் ஃபிரான்சிஸ்கோ மாகாணத்தில் அமைந்துள்ளது டிவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயலகம். அந்த அலுவலகத்திற்கு எலான் மஸ்க் சென்றுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் பரவி, நெட்டிசன்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

அந்த வீடியோவில் மஸ்க் கையில் ஒரு தொட்டியை எடுத்து செல்கிறார். அதை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தவர், "Entering Twitter HQ - let that sink in" என பதிவிட்டிருந்தார். ஆங்கிலத்தில் தொட்டையை Sink என குறிப்பிடுவோம். அந்த வார்த்தைக்கு மற்றொரு அர்த்தம் "உள் இறங்கட்டும்" என்ற வாக்கில் வரும்.

அவரது பதிவில் இருந்த அர்த்தம், "ட்விட்டர் தலைமையகத்தில் நுழைகிறேன்...அது நன்றாக புரியட்டும்" என்பது. எலான் மஸ்க்கின் இந்த சொல்லாடலை வியந்து பாராட்டிய நெட்டிசன்ஸ், வீடியோவையும் பகிர்ந்துவருகின்றனர். மேலும் அவரது இந்த நகைச்சுவை தன்மையையும் பாராட்டினர்.

எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை வாங்குவதாக கூறியிருந்தார். ஆனால் அதில் உள்ள போலிக் கணக்குகள் குறித்த விவரங்களை தர மறுத்ததாக சொல்லி ஒப்பந்தத்தை இறுதி செய்யமுடியாது என்று பின்னர் அறிவித்தார். இதை எதிர்த்து டிவிட்டர் நிறுவனம் வழக்கு தொடுத்தது. இந்நிலையில் விரைவில் ஒப்பந்தத்தை முடிக்க நீதிமன்றம் எலான் மஸ்க்கிற்கு கெடு விதித்துள்ளது.

தற்போது எலான் மஸ்க் தன் டிவிட்டர் பயோவை "டிவிட்டர் சீஃப் (Chief Twit) மாற்றியுள்ளார். நிதி பெற வங்கிகளுடன் இறுதிக் கடன் ஒப்பந்த பணியில் எலான் மஸ்க் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளன. விரைவில் உறுதியான செய்திகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?