டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், ட்விட்டர் நிறுவனங்களின் சொந்தக்காரர் எலான் மஸ்க். உலகின் மிகப் பெரிய பணக்காரரான இவருக்கும் சமூக ஊடகங்களின் முடிசூடா மன்னனாக திகழும் மார்க் சக்கர்பெர்குக்கும் சில நாட்களாக தகராறுகள் இருந்து வருகின்றன.
எல்லாம் தொடங்கியது எலான் மஸ்க் சமூக ஊடகமான ட்விட்டரை வாங்கிய போதுதான். ஏனென்றால் சமூக ஊடகங்களைப் பொறுத்தவரையில் அவருக்கு மிகப் பெரிய போட்டியாக இருந்தது பேஸ்புக், இன்ஸ்டாகிராம் நிறுவனங்களின் தாய் நிறுவனமான மெட்டா தான்.
சில நேரங்களில் மஸ்க் மெட்டா நிறுவனத்தின் தலைவரான மார்க் சக்கர்பெர்கை வம்பிழுக்கும் விதமாக ட்வீட்களைப் பகிர்ந்துவந்தார்.
இருவருக்கும் இடையிலான பிரச்னை வெடித்தது த்ரெட்ஸ் என்ற புதிய செயலியை மார்க் உருவாக்கியபோது தான். இந்த புதிய செயலி அப்படியே ட்விட்டரைக் காப்பியடித்தது போல இருக்கிறது என்ற கருத்துகள் சொல்லப்பட்டன.
அத்துடன் இன்ஸ்டாகிராம் மூலம் ஒரே நாளில் மில்லியன் கணக்கான பயனர்களை த்ரெட்ஸ் செயலிக்குள் இழுத்துவந்தார் மார்க்.
இது மஸ்கை கோவப்படுத்தவே அவரை ட்விட்டரில் திட்டித் தீர்த்தார். நீயா? நானா? யார் பெரியவர் என மோதிப்பார்க்கலாம் எனும் அளவுக்கு இந்த பிரச்னைகள் வளர்ந்துள்ளன.
த்ரெட்ஸ் செயலி பற்றிய ஒரு பயனரின் ட்வீட்டுக்கு பதிலளித்த எலான் மஸ்க் தான் முதன் முறையாக, "அவருக்கு தைரியம் இருந்தால், நான் கூண்டுக்குள் சண்டையிடத் தயாராக இருக்கிறேன்" என ட்வீட் செய்தார்.
மறுநாள் மார்க் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் மஸ்கின் ட்வீட் ஸ்கிரீன் ஷாட்டை பகிர்ந்து, "எனக்கு இருப்பிடத்தை அனுப்பு" எனக் கேட்டிருந்தார்.
மார்க்கின் இந்த பதில் வெகுளியானது அல்ல. அவர் சீரியஸாகவே கூறியிருக்கிறார் என மெட்டா நிறுவனத்தின் அதிகாரி கூறியினார்.
Mark Zukerberg
கூண்டுக்குள் குத்துசண்டை நடத்தும் UFC தலைவர் டானா வைட் தான் இந்த சண்டையை நடத்தி வைக்கத் தயாராக இருப்பதாகக் கூறினார்.
எலான் மஸ்க், யுஎஃப்சி ஜாம்பவான் ஜார்ஜஸ் செயின்ட் பியர், கலப்பு தற்காப்புக் கலை பயிற்சியாளர் ஜான் டானஹர் மற்றும் பிரேசிலியன் ஜியு-ஜிட்சு கருப்பு பெல்ட் லெக்ஸ் ஃப்ரிட்மேன் போன்ற பெரிய பெரிய வீரர்களுடன் பயிற்சி செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.
இதேப்போல மார்க்கும் பெரிய சண்டைக்காரர்களுடன் புகைப்படங்களை வெளியிட, சண்டை உண்மையாகவே நடக்குமா என நெட்டிசன்கள் உற்று கவனிக்கத் தொடங்கிவிட்டனர்.
எலான் மஸ்க், "ட்விட்டரின் முன்னாள் ஊழியர்களை வேலைக்கு அமர்த்தி எங்கள் சீக்ரட்களைத் திருடிவிட்டார் மார்க்" என குற்றம் சுமத்தினார்.
மேலும் கட்டுரையில் எழுத முடியாதபடிக்கு சில ட்வீட்களையும் போட்டார். சரி இந்த சண்டைதான் நடக்குமா? எப்போது நடக்கும் என்பது தானே உங்களது கேள்வி.
இருவரும் சண்டைக்குத் தயார். நடத்தி வைக்கவும் ஆட்கள் தயார். வேடிக்கைப் பார்க்க நாமும் தயாராக இருக்கிறோம். ஆனால் சண்டை எப்போது என கூறப்படவில்லை. சில தார்மீக பிரச்னைகளும் இருக்கின்றன.
எலான் மஸ்க் 52 வயது நபர். 6'1 அடி அவரது உயரம். என்னதான் அவர் ட்ரெயினர்களுடன் புகைப்படங்கள் வெளியிட்டாலும் அவர் ஜிம் பக்கமே சென்றிருக்க மாட்டார் என்றுதான் அவரைப்பார்த்தால் நமக்குத் தோன்றும்.
மறுபக்கம் 39 வயது மார்க். 5'6 இவரது உயரம். தினசரி உடற்பயிற்சிகள் செய்பவர். கடந்த மே மாதம் ஜியு-ஜிட்சு என்ற தற்காப்புக்கலை போட்டியில் பதக்கங்கள் வென்றது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் இருவரும் யு.எஃப்.சி கூண்டில் களமிறங்குவார்களா? சண்டை என வந்தால் யாருடைய சட்டை கிழியும்?
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust