தன்னை பணியிலிருந்து நீக்கியதால் ஆத்திரமடைந்த நபர் புல்டோசர் கொண்டு நிறுவனத்தின் சொகுசு பங்களாவை உடைக்கும் வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது.
கனடாவில் உள்ள ஒன்டாரியோ பகுதியில் மஸ்கோகா ஏரிகள் அருகே உள்ள ப்ரைட் ஆஃப் ரூசோ மரினாவில் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அந்த நபர் தாக்கும் பங்களாவுக்கு அருகில் உள்ள கட்டிடங்களும் சேதமடைந்துள்ளன. இதனை சரி செய்ய மில்லியன் கணக்கில் செலவாகும் என்று அந்த பகுதியினர் கூறியிருக்கின்றனர்.
காவல்துறையினர் தலையிட்டு கட்டிடத்தை இடித்து தள்ளிய 59 வயது நபரை கைது செய்தனர். இவர் மரினாவின் முன்னாள் ஊழியர்.
அவருக்கு 5000 அமெரிக்க டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதுடன் விரைவில் நீதிமன்றத்திலும் விசாரிக்கப்படவுள்ளார். இது இந்திய மதிப்பில் 3,95,869 ரூபாய்.
இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.
வேலையில் இருந்து நீக்கப்படுவது நிச்சயம் துன்பமான விஷயம் தான். ஆனால், அதற்கான காரணத்தை புரிந்து ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு முன்னேர வேண்டும்.
வாழ்கையில் எல்லா துன்பங்களையும் கடந்து செல்ல பழகிக்கொள்ள வேண்டும் எல்லாவற்றுக்கும் எதிர்வினையாற்றுவதனால் யாருக்கு என்ன பயன்?
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust