eVTOL : 2025 இல் அறிமுகமாகும் பறக்கு டாக்ஸிகள் - இந்தியாவிலும் செயல்படுமா?  Twitter
உலகம்

eVTOL : 2025 இல் அறிமுகமாகும் பறக்கும் டாக்ஸிகள் - இந்தியாவிலும் செயல்படுமா?

"eVTOL பயன்பாட்டுக்கு வரும் காலம் வெகுதொலைவில் இல்லை. நாம் இப்போது 2023ல் இருக்கிறோம் 2025ம் ஆண்டு இது நடைமுறைக்கு வரும். இந்த உலகளாவிய திட்டத்தில் இந்தியாவும் முக்கியமான பங்குவகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது."

Antony Ajay R

eVTOL என்பது ஒருவகையான விமான மாதிரியாகும். மி்ன்சாரத்தில் செயல்படும் இது நேரடியாக பறக்கத் தொடங்கும். நேர்கோட்டிலேயே தரையிறங்கவும் செய்யும்.

உலகம் முழுவதும் உள்ள நாடுகள் இந்த வகை விமானங்கள் மூலம் புதிய போக்குவரத்து முறையைப் பயன்படுத்த ஆலோசித்துவருகின்றன. இதில் இந்தியாவும் இணைந்துள்ளது எனக் கூறியுள்ளார் சிவில் விமானப்போக்குவரத்து துறை செயலரான ராஜிவ் பன்சல்.

eVTOL வாகனத்தில் பயணிகளும் பயணிக்கலாம், சரக்குகளும் ஏற்றிச் செல்ல முடியும். சிறியதாக உள்ளூர் பயணங்களை மேற்கொள்ளும் விதமாக இது உருவாக்கப்படும் எனக் கூறியுள்ளனர்.

இந்தியாவின் முதல் அட்வான்ஸ்டு ஏர் மொபிலிட்டி (ஏஏஎம்) மாநாட்டில் பேசிய அவர், "eVTOL பயன்பாட்டுக்கு வரும் காலம் வெகுதொலைவில் இல்லை. நாம் இப்போது 2023ல் இருக்கிறோம் 2025ம் ஆண்டு இது நடைமுறைக்கு வரும். இந்த உலகளாவிய திட்டத்தில் இந்தியாவும் முக்கியமான பங்குவகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது." எனப் பேசினார்.

eVTOL தான் எதிர்காலமா?

eVTOL என்பதை மின்சார விமான டாக்ஸிகள் என்றும் கூறலாம். சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் 2025 க்குள் இந்த ஏர் டாக்சிகளை அறிமுகப்படுத்துவதற்கான திட்டங்களை ஏற்கனவே அறிவித்துள்ளன.

eVTOL இந்தியாவில் சிறந்த தொழில்முறையாக கொண்டுவரப்பட வேண்டும் எனக் கூறிய பன்சல், இதுகுறித்து தொழில்துறையினர் கருத்து தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

எலக்ட்ரிக் கிராஃப்ட்களை இயக்குவது விலை குறைவு, மிகவும் அமைதியானது, பாதுகாப்பானது மற்றும் பாரம்பரிய ஹெலிகாப்டர்களுடன் ஒப்பிடும் போது சுற்றுசூழலுக்கு ஏற்றதுமாகும்.

இந்த சிறிய தொலைவு விமானப் பயணங்களை மக்களும் நீண்டகாலமாக எதிர்பார்க்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே துபாயில் இதுபோன்ற ஏர்டாக்ஸி திட்டத்தை சோதனை செய்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?