Facebook : ஆண்களை விட பெண்களுக்கு 15.7% சம்பளம் குறைவு - அதிர்ச்சி அளித்த அறிக்கை! Twitter
உலகம்

Facebook : ஆண்களை விட பெண்களுக்கு 15.7% சம்பளம் குறைவு - அதிர்ச்சி அளித்த அறிக்கை!

உலகின் ஆகச் சிறந்த தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான மெட்டாவில், ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு சம்பளம் கொடுக்கப்படுவதில்லை என்கிற செய்தி, ஒட்டுமொத்த உலகையும் சற்றே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

NewsSense Editorial Team

உலகில் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்பு தான் மெட்டா என்கிற பெயரில் இயங்கத் தொடங்கியது.

ஃபேஸ்புக் (மெட்டா), அமேசான், ஆப்பிள், நெட்ஃப்ளிக்ஸ், கூகுள் என உலகின் டாப் 5 தொழில்நுட்ப நிறுவனங்களை ஒன்றாக இணைத்து FAANG கம்பெனிஸ் என்று அழைப்பர். இந்த FAANG நிறுவனங்களில் வேலை பார்ப்பது எந்த ஒரு சாமானியர்களுக்கும் சம்பளம் வாங்கும் ஐடி நபர்களுக்கும் ஒரு பெருங்கனவு தான்.

அப்பேற்பட்ட உலகின் ஆகச் சிறந்த தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான மெட்டாவில், ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு சம்பளம் கொடுக்கப்படுவதில்லை என்கிற செய்தி, ஒட்டுமொத்த உலகையும் சற்றே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான மெட்டா அயர்லாந்து பாலின சம்பள அறிக்கையில், கிட்டத்தட்ட 3000 பெண்கள் அயர்லாந்தில் உள்ள மெட்டா அலுவலகத்தில் வேலை பார்ப்பதாகவும், சுமார் 5000 பெண்கள் பிரிட்டனில் உள்ள மெட்டா அலுவலகத்தில் வேலை பார்ப்பதாகவும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

ஒட்டுமொத்தமாக கணக்கிட்டால் மெட்டா நிறுவனத்துக்காக உலக அளவில் வேலை பார்க்கும் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் இந்த பெண்கள் மட்டும் சுமார் 10 சதவீதம் பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2022 ஆம் ஆண்டு அயர்லாந்தில் உள்ள மெட்டா அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண்களுக்கு, அதே பதவியில் அதே பணிகளைச் செய்யும் ஆண்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை விட 15.7 சதவீதம் குறைவாக சம்பளம் கொடுக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

அதேபோல அயர்லாந்தில் உள்ள மெட்டா அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஆண்களுக்கு கொடுக்கப்படும் போனஸ் தொகையை விட, அதே பதவி மற்றும் பொறுப்புகளில் அதே வேலையை பார்க்கும் பெண்களுக்கு கிட்டத்தட்ட 43 சதவீதம் அளவுக்கு போனஸ் தொகை குறைவாகவே வழங்கப்பட்டிருக்கிறது.

பிரிட்டனில் உள்ள மெட்டா அலுவலகத்தில் ஆண்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை விட பெண்களுக்கு 2.1 சதவீதம் குறைவாகவே சம்பளம் வழங்கப்படுவதாகவும், பிரிட்டன் மெட்டா அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஆண்களுக்கு கொடுக்கப்படும் போனஸ் தொகையை விட, சுமார் 34.8% குறைவாகவே அதே அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண்களுக்கு போனஸ் வழங்கப்படுவதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அயர்லாந்தில் உள்ள மெட்டா நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒரு ஊழியரின் ஆண்டு சராசரி சம்பளம் 1.5 லட்சம் அமெரிக்க டாலரில் இருந்த தொடங்குகிறது. இதிலும் பெண்களை விட ஆண்களுக்கு ஆண்டு சராசரி சம்பளம் 23 ஆயிரம் அமெரிக்க டாலர் அதிகமாக வழங்கப்படுகிறதாம். பிரிட்டனில் உள்ள மெட்டா அலுவலகத்தில் பெண்களை விட ஆண்களுக்கு 3,000 அமெரிக்க டாலர் ஆண்டு சராசரி சம்பளம் அதிகமாக இருக்கிறது.

சரி இப்போதைக்கு இந்த அறிக்கைகள் எல்லாம் வெளிவந்திருக்கின்றனவே, விரைவில் மெட்டா நிறுவனத்தின் தலைவர் மார்க் சக்கர்பெர்க் இது தொடர்பாக ஏதேனும் நடவடிக்கை எடுப்பாரா? என்றால் சந்தேகம் தான்.

காரணம், கடந்த சில மாதங்களாக தொடர்ந்து மெட்டா நிறுவனத்திலிருந்து ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு வருகிறார்கள். மெட்டாவெர்ஸ் தளத்தை எப்படியாவது உலகப் புகழ் பெறச் செய்ய வேண்டும், பயனர்களை பெரிய அளவில் ஈர்க்க வேண்டும் என முட்டி மோதிக் கொண்டிருக்கிறது மெட்டா நிறுவனம்.

எனவே, மெட்டா நிறுவனம் இந்த பிரச்சனையை தீவிரமாக எடுத்துக் கொண்டு உடனடியாக தீர்வைக் கொடுக்கும் என எதிர்பார்க்க முடியாதென மேஷபிள் இந்தியா வலைதளம் குறிப்பிட்டிருக்கிறது.

அயர்லாந்தில் உள்ள மெட்டா நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒரு ஊழியரின் ஆண்டு சராசரி சம்பளம் 1.5 லட்சம் அமெரிக்க டாலரில் இருந்த தொடங்குகிறது. இதிலும் பெண்களை விட ஆண்களுக்கு ஆண்டு சராசரி சம்பளம் 23 ஆயிரம் அமெரிக்க டாலர் அதிகமாக வழங்கப்படுகிறதாம். பிரிட்டனில் உள்ள மெட்டா அலுவலகத்தில் பெண்களை விட ஆண்களுக்கு 3,000 அமெரிக்க டாலர் ஆண்டு சராசரி சம்பளம் அதிகமாக இருக்கிறது.

சரி இப்போதைக்கு இந்த அறிக்கைகள் எல்லாம் வெளிவந்திருக்கின்றனவே, விரைவில் மெட்டா நிறுவனத்தின் தலைவர் மார்க் சக்கர்பெர்க் இது தொடர்பாக ஏதேனும் நடவடிக்கை எடுப்பாரா? என்றால் சந்தேகம் தான்.

காரணம், கடந்த சில மாதங்களாக தொடர்ந்து மெட்டா நிறுவனத்திலிருந்து ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு வருகிறார்கள். மெட்டாவெர்ஸ் தளத்தை எப்படியாவது உலகப் புகழ் பெறச் செய்ய வேண்டும், பயனர்களை பெரிய அளவில் ஈர்க்க வேண்டும் என முட்டி மோதிக் கொண்டிருக்கிறது மெட்டா நிறுவனம். எனவே, மெட்டா நிறுவனம் இந்த பிரச்சனையை தீவிரமாக எடுத்துக் கொண்டு உடனடியாக தீர்வைக் கொடுக்கும் என எதிர்பார்க்க முடியாதென மேஷபிள் இந்தியா வலைதளம் குறிப்பிட்டிருக்கிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?